Andrew Flintoff: விபத்தில் சிக்கிய கார்.. ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர்.
இங்கிலாந்தின் தெற்கு லண்டனில் உள்ள Dunsfold Park Aerodrome ன் டெஸ்ட் டிராக்கில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தனியார் ஊடகத்திற்காக அவர் சூட்டிங்கில் இருந்தபோது இந்த மோசமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. விபத்து நடைபெற்ற உடனேயே அங்கிருந்த மருத்துவ நிபுணர்கள் அவரை பரிசோதனை செய்ததாகவும் பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், விபத்தில் ஃபிளிண்டாஃப்-ற்கு மோசமான காயங்கள் ஏற்படவில்லை என அந்த ஊடகம் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது. தற்போது 45 வயதான ஃபிளிண்டாஃப் இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதுவரையில் 117 ஒருநாள் போட்டிகளிலும் 7 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இவர், தனியார் ஊடகம் தயாரித்துவரும் கார் பந்தைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். விபத்து பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,"இன்று காலை டாப் கியர் சோதனைப் பாதையில் நடந்த விபத்தில் ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் காயமடைந்தார். உடனடியாக மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்றனர். அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், மேலும் விவரங்களை உரிய நேரத்தில் உறுதி செய்வோம். ஃபிளின்டாஃப்பின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல. படப்பிடிப்பிலும் வழக்கமான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருந்தன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டும் ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் இதே நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் சிக்கினார். மணிக்கு 125 மைல் வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்தை சந்தித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் விபத்தில் சிக்கியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆப்ரேஷனின்போது Football மேட்ச் பார்த்த நோயாளி.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி கமெண்ட்..!
- X-Ray தானே எடுத்துட்டா போச்சு.. ஹாஸ்பிட்டல் ஊழியர்களையே ஆச்சர்யப்பட வச்ச யானை.. கியூட்டான வீடியோ..!
- VIDEO: "அந்த சிகிச்சை செலவு ₹ 5 கோடி".. வாழ்நாளை எண்ணும் மகளுக்காக மன்றாடும் சென்னை பெற்றோர்..! உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்கள்..
- "தூங்க விடாம சத்தம் போட்டுட்டே இருக்கு!!".. தீவிர சிகிச்சைபெற்று வந்த சக நோயாளியின் வென்டிலேட்டரை ஆஃப் பண்ணிய 72 வயது மூதாட்டி.. ஷாக் ஆன மருத்துவர்கள்.
- வர்ணனையில் ஈடுபட்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீர் நெஞ்சு வலியா?.. வெளியான தகவலால் பரபரப்பான கிரிக்கெட் வட்டாரம்!!
- மதுரை எய்ம்ஸ் மருத்துவனை எப்போது கட்டி முடிக்கப்படும்?.. நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பரபரப்பு அறிக்கை..!
- ஆளே இல்லாமல் திறந்த ஹாஸ்பிடல் கதவு?!.. யார் கிட்ட பேசுறாரு செக்யூரிட்டி?. வந்தது ஒரு நாள் முன்னாடி இறந்த பொண்ணா.? திகில் சம்பவம்
- 3 வது முறை கர்ப்பம்.. பிரசவத்துக்கு அழைத்து சென்ற குடும்பம்.. செக்கப்க்கு முன் இளம்பெண் போட்டுடைத்த உறையவைக்கும் உண்மை.!
- பெண் குழந்தை பிறந்தா 1 ரூபா கூட மருத்துவ கட்டணம் கிடையாதா.? இந்தியாவுல இப்படி ஒரு டாக்டரா..?
- "இதுக்கு மேல தான் இத்தன வருசமா ஹாஸ்பிடல் இருந்துச்சா?".. லீக் ஆன தண்ணி.. என்னடான்னு தோண்டி பாத்தப்போ வெளியே தெரிஞ்ச 132 வருச மர்மம்!!