"Practice பண்ற நேரத்துலயும் ஒரு நியாயம் வேணாமா??.." நாற்காலியை உடைத்த பிரபல 'KKR' வீரர்.. வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் ஆரம்பித்து, ஒரு மாதம் ஆன நிலையில், எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் இன்பத்தில் விறுவிறுப்பு அதிகரித்துள்ளது.
இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறும் அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், அனைத்து அணிகளும் வெற்றிக்கு வேண்டி கடுமையாக போராடி வருகிறது.
இதனால், அடுத்தடுத்து போட்டிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் தோல்வியில் 'KKR'
இதில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இதுவரை 8 போட்டிகள் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளது. முதல் 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்த கொல்கத்தா அணி, அடுத்ததாக டெல்லி, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில், தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளது.
அனைத்திலும் தடுமாற்றம்..
இதனால், மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியும் கொல்கத்தா அணிக்கு எழுந்துள்ளது. பலம் வாய்ந்த அணி என்றாலும், தொடர்ந்து பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கொல்கத்தா அணி சொதப்பி வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் சிறப்பாக ஆட, நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோர் ரன் எடுக்க தடுமாறி வருகின்றனர்.
அதே போல, நிலையான தொடக்க ஜோடியையும் அந்த அணியால் உருவாக்க முடியவில்லை. இதே போல, பவுலிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத கொல்கத்தா பந்து வீச்சாளர்கள், ரன்களையும் வாரி வழங்கி வருகின்றனர். ஆனால், அதிரடி வீரர் ரசல் மட்டும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ஒரு ஓவர் மட்டும் பந்து வீசி, 4 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிந்திருந்தார்.
கொல்கத்தா வெளியிட்ட வீடியோ
அதே போட்டியில், 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தும் விளாசி இருந்தார் ரசல். இருந்தும், கடைசி ஓவரில் அவர் அவுட் ஆனதால், குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, தங்களின் அடுத்த போட்டியில், ஏப்ரல் 28 ஆம் தேதி, டெல்லி அணியை சந்திக்கிறது கொல்கத்தா. இதில் வெற்றி பெற்று மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் நோக்கிலும் கொல்கத்தா வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
நாற்காலியை உடைத்த ரசல்
இந்நிலையில், ரசல் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், அதிரடியாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரசல், மைதானத்தில் ஓரத்தில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேர் ஒன்றை உடைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், ரசலின் அதிரடியை பார்த்து வியந்து போய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இந்திய அணியில் என் மகன்.." இளம் வீரருக்காக தோனி, கோலி சொன்ன பொன்னான வார்த்தை.. நெகிழும் பிரபல வீரரின் தந்தை..
- "கோலி இத செஞ்ச முடிக்குற வரைக்கும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.." பேனர் ஏந்திய ரசிகைகள்.. இதான் இப்போ செம 'வைரல்'!!
- டாஸ் போடுற நேரத்துல.. 'கோலி' பற்றி 'டு பிளெஸ்ஸிஸ்' சொன்ன விஷயம்.. கடும் உற்சாகத்தில் ரசிகர்கள்.. "இன்னைக்கி இருக்கு சரவெடி.."
- "ஹர்திக்கோ, தோனியோ.. யார பாத்தும் அந்த பையன் பயப்படுறது இல்ல.." புகழ்ந்த ஆகாஷ் சோப்ரா.. "அவரு தான் இப்போ பெஸ்ட்.."
- ”CSK இந்த விஷயத்துல ரெய்னாவ மிஸ் பண்ணுது”… அட ஆமால்ல… அமித் மிஸ்ரா போட்ட வைரல் tweet!
- “ராயுடு சூப்பரா விளையாடுனாரு.. ஆனா இங்கதான் நாங்க மிஸ் பண்ணிட்டோம்”.. கடைசி ஓவர் வரை போராடி தோல்வி.. ஜடேஜா கொடுத்த விளக்கம்..!
- கடைசி வரை இருந்த நம்பிக்கை.. தோனி அவுட்டானதும் மைதானத்தில் நடந்த விஷயம்.. "இதுனால தான்'ங்க அவர் பெஸ்ட் 'பினிஷர்'.."
- "ஜடேஜா மட்டும் அத கரெக்ட்டா பண்ணி இருந்தா 'CSK' கூட 'Win' பண்ணி இருக்கலாம்.." அடித்துச் சொல்லும் முன்னாள் வீரர்..
- "ரிஷி தவான் கண்ணாடி'ய பாத்து தான் ராயுடு பொளந்து கட்டி இருப்பாரு.." முன்னாள் வீரர் போட்ட முடிச்சு.. "இதுல என்னங்க இருக்கு??.."
- "அதுக்கு இது சரியா போச்சு.." கேட்ச் விட்ட சாண்டனர்.. ஜடேஜாவுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பறக்க விட்ட ரசிகர்கள்.. பின்னணி என்ன??