"இவருக்கு என்ன தான் ஆச்சுன்னு என் 'மனைவி' கன்ஃப்யூஸ் ஆயிருப்பா..." 'இந்திய' வீரரின் ரசிகராக மாறி... 'பிரபல' தொழிலதிபர் போட்ட 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி 20 போட்டி, இன்றிரவு அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளுக்கு பிறகு, 1 - 1 என சமநிலையில் தொடர் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், எந்த அணி தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான அக்சர் படேல், மூன்று போட்டிகளில் ஆடி, 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த தொடரின் நட்சத்திர வீரராக வலம் வந்த அக்சர் படேலை பாராட்டும்  விதமாக, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra), 'இந்தியாவின் இந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக, இந்த சன் கிளாஸை நான் பெற விரும்புகிறேன். அவை என்ன பிராண்ட். நான் எங்கே வாங்க முடியும்?' என அக்சர் படேலின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டி 20 போட்டிக்கு முன்னதாக ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா, 'இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் விதமாக, அக்சரின் சன் கிளாஸ்களை நான் பெறப் போவதாக அறிவித்திருந்தேன். அதே போல, தற்போது ஒரு ஜோடி கண்ணாடியை நான் வாங்கியுள்ளேன். இன்றைய போட்டியைக் காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.



டிவி பார்க்க எந்த சன் கிளாஸ்களும் தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனது மனைவி கூட இவருக்கு என்ன ஆகி விட்டது என நினைக்கத் தோன்றும். ஆனாலும், இது நல்ல அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கலாம்!' என குறிப்பிட்டிருந்தார்.

 

அந்த சன் கிளாஸ் அதிர்ஷ்டமாக அமையும் என ஆனந்த் மஹிந்திரா கூறியிருந்தது போல, இந்திய அணி அந்த போட்டியில் வென்றது. மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர், கிரிக்கெட் வீரரின் ரசிகராக மாறி, மிகவும் ஜாலியாக செய்த ட்வீட், நெட்டிசன்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றது.

 

மேலும், இந்த பதிவில் ஒருவர், சன் கிளாஸ் போட்டு கிரிக்கெட் பார்க்கும் புகைப்படத்தை பகிருமாறு கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, 'இந்தியா தொடரை கைப்பற்றியதும் புகைப்படத்தை பதிவிடுகிறேன். இந்த சன் கிளாஸ், ஒரு போட்டிக்கான அதிர்ஷ்டமாக மட்டும் அமையாமல், இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்