"இந்தியா-னா என்னன்னு உலகத்துக்கு நிரூபிச்சிட்ட".. உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை.. நெகிழ வைத்த ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை நிகாத் சரீனை இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 11 வயசு பார்வை குறைபாடுள்ள சிறுவனை CEO-வாக நியமித்த பிரபல நிறுவனம்.. கலங்க வைக்கும் வீடியோ..!

குத்துச்சண்டை போட்டி

மகளிருக்கான உலக குத்துச்சண்டை போட்டி துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் நடைபெற்றுவந்தது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட நிகாத் சரீன் தங்கப் பதக்கத்தை வென்று, சாதனை படைத்துள்ளார். 52 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் வெற்றிபெற்றார். இந்நிலையில் நிகாத் சரீனை இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.

வாழ்த்து மழை

இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்," நம்முடைய குத்துச்சண்டை வீரர்கள் நம்மை பெருமைகொள்ளச் செய்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் தங்கம் வென்ற நிகாத் சரீன், வெண்கல பதக்கம் வென்ற மனிஷா மௌன் மற்றும் பிரவீன் ஹூடா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிகாத் சரீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின்,"பெண்களுக்கான உலகக் குத்துச்சண்டை தொடரில் அபாரமாக விளையாடி தங்கம் வென்றுள்ள நிகாத் சரீனுக்குப் பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர். நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச் சிறந்த உந்துசக்தியாக விளங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மகளிருக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற, நிகாத் சரீனுக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"உலகத்திற்கு இந்தியா மற்றும் நீங்கள் யார் என்று காட்டியதற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, மகளிருக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற, நிகாத் சரீனுக்கு சமூக வலை தளங்களில் மக்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

ANAND MAHINDRA, NIKHAT ZAREEN, ANAND MAHINDRA CONGRATULATES NIKHAT ZAREEN, INDIAN AMATEUR BOXER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்