என்ன மனுஷன்யா.. பறிபோன வெற்றி வாய்ப்பு.. கிரவுண்ட்ல ஜப்பான் மேனேஜர் செஞ்ச காரியம்.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடரில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருக்கிறது ஜப்பான். முக்கியமான போட்டியில் குரோஷியாவிடம் தோல்வியடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஜப்பான் அணியின் மேனேஜர் செய்த செயல் பலரையும் நெகிழ செய்திருக்கிறது. அவரது இந்த செயலை இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா பாராட்டியிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | "என்ன இவ்ளோ இருக்கு?".. 3 வருசமா வயிற்று வலி & மஞ்சள் காமாலைன்னு ஹாஸ்பிடலுக்கு ஓடிய நபர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் குரோஷியா அணியை எதிர்த்து விளையாடியது ஜப்பான் அணி. 1-1 என ஆட்டம் டை ஆனதால் பெனால்டி கிக் அவுட் கொடுக்கப்பட்டது. இதில், குரோஷியா 3 கோல்களை அடித்து அசத்தியது. ஆனால், ஜப்பானால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக காலிறுதி வாய்ப்பை ஜப்பான் இழந்தது.

இருப்பினும் இந்த போட்டி முடிவடைந்த பிறகு ஜப்பான் அணியின் மேனேஜர் ஹஜிம் மொரியாசு (Hajime Moriyasu) தனது தலையை தாழ்த்தி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது. இந்நிலையில், இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஜப்பான் மேனேஜரின் இந்த செயலை பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஜப்பான் அணி மேனேஜர் ஹஜிம் மொரியாசு ரசிகர்களிடம் நன்றியுடன் வணங்கியுள்ளார். இதை விவரிக்க இரண்டு வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன. அவை, கண்ணியம் மற்றும் கருணை" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

 

Also Read | 9 வருடம் முன் இறந்த மனைவி.. தற்கொலைன்னு நெனச்சிட்டு இருந்தப்போ.. தெரியவந்த அதிர்ச்சி.!

ANAND MAHINDRA, JAPAN FOOTBALL MANAGER, FIFA2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்