”CSK இந்த விஷயத்துல ரெய்னாவ மிஸ் பண்ணுது”… அட ஆமால்ல… அமித் மிஸ்ரா போட்ட வைரல் tweet!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணி இந்த சீசனில் எப்போதும் இல்லாத வகையில் மோசமாக பீல்டிங்கில் சொதப்பி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | “அய்யோ இது பூனைக்குட்டி இல்ல”.. தேயிலை செடிகளுக்கு இடையே கேட்ட சத்தம்.. நீலகிரி அருகே அதிர்ச்சி..!

ஐபிஎல் 2022…

15-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சிஎஸ்கே தொடர் தோல்விகள்…

இந்த சூழலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக சென்னை அணி, ஐபிஎல் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராகவும், இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராகவும், மூன்றாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் என வரிசையாக தோல்வி அடைந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி பின்தங்கி மோசமான நிலையில் இருந்தது. பின்னர் ஆறுதலாக RCB அணியை வெற்றிப் பெற்று கணக்கைத் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் இப்போது பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்து இதுவரையிலான 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோற்று ப்ளே ஆஃப் வாய்ப்பு மிகவும் மந்தமாகியுள்ளது.

மோசமான பீல்டிங்…

இந்த தொடர் தோல்விகளுகு சி எஸ் கே வீரர்களின் மோசமான பீல்டிங் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் கேட்ச் மிஸ், ஸ்டம்பிங் மிஸ் என பல கோட்டைகள் விடுகின்றன. இதனால் கூடுதல் ரன்களை எதிரணியினர் சேர்க்கும் சூழல் உருவாகிறது. இதில் உச்சமாக ஃபீல்டிங்கில் கிங் என சொல்லப்படும் கேப்டன் ரவிந்தர ஜடேஜாவே சில கேட்ச்களை மிஸ் செய்வது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா இதுகுறித்து “ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங்கில் ரெய்னாவை மற்றவற்றை விட அதிகமாக மிஸ் செய்கிறது. விரைவான த்ரொகள், டைரக்ட் ஹிட்ஸ் மற்றும் சிறப்பான கேட்ச்கள்” என ரெய்னாவைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். கடந்த சில மேட்ச்களாக சி எஸ் கேவின் பீல்டிங்கைப் பார்க்கும் போது அது உண்மைதான் என்றே தோன்றுகிறது.

மிஸ்டர் ஐபிஎல்…

மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் அளவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர். சி எஸ் கேவில் தோனி தல என்றால் ரெய்னாதான் தளபதி என்று ரசிகர்கள் கொண்டாடிய வீரர். 11 சீசன்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வந்த சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் இவரை சி எஸ் கே உள்ளிட்ட எந்த ஒரு அணியும் எடுக்கவில்லை. இதனால் இப்போது ஐபிஎல் 2022 சீசனில் இந்தி வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். ரெய்னா இல்லாத முதல் ஐபிஎல் தொடராக அமையப்போகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, CSK, MS DHONI, SURESH RAINA, AMITH MISHRA, IPL 2022, சிஎஸ்கே, ஐபிஎல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்