‘ஓ இதுதான் காரணமா..?’ பேட்டை கடித்த தோனி.. முன்னாள் வீரர் கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | வானத்தில் தோன்றிய ஜெல்லி மீன் போன்ற வடிவம்.. திகைத்துப்போன பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 41 ரன்களும், டெவோன் கான்வே 87 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து வந்த ஷிவம் துபேவும் (32 ரன்கள்) தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். இதன்பின்னர் ராயுடு வந்த வேகத்தில் 5 ரன்களில் வெளியேற, கேப்டன் தோனி 5-வது வீரராக களமிறங்கினார். தான் எதிர்கொண்ட 2-வது பந்திலேயே சிக்சர் விளாசினார். மொத்தம் 8 பந்துகளை எதிர்கொண்ட தோனி 21 ரன்கள் சிக்சர், 1 பவுண்டரி) 2 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை சிஎஸ்கே அணி குவித்தது.

இதனை அடுத்து 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது. ஆனால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 17.4 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

முன்னதாக தோனி களமிறங்குவதற்கு முன்பு பெவிலியனில் காத்திருந்தபோது தனது பேட்டை பல்லால் கடித்துக் கொண்டிருந்தார். இந்த போட்டோ இணையத்தில் பரவி வைரலானது, நெட்டிசன்கள் பலரும் தோனி ஏன் பேட்டை கடிக்கிறார்? என கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டுவீட் செய்த அவர், ‘தோனி ஏன் அடிக்கடி தனது பேட்டை கடிக்கிறார் என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள். அவர் தனது பேட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக, பேட்டில் உள்ள டேப்பை கடித்து அகற்றுகிறார். தோனியின் பேட்டில் டேப் அல்லது நூல் இருப்பதை நீங்கள் எப்போதுமே பார்க்கவே முடியாது’ என அமித் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

CRICKET, IPL 2022, CSK, MS DHONI, AMIT MISHRA, CSK CAPTAIN DHONI, DELHI CAPITALS, CSK VS DC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்