"சிஎஸ்கே அணிக்காக ஆடுங்க ப்ளீஸ்.." ரசிகர் வைத்த கோரிக்கை.. "என்ன மன்னிச்சுடுங்க.." அமித் மிஸ்ரா சொன்ன பதில்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஐபிஎல் சீசனில், கோப்பையை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே தழுவி உள்ளது.

Advertising
>
Advertising

கொல்கத்தா, லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில், அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ள சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு குறித்தும், கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே எதிர்கொண்டு வருகிறது.

ஜாலியாக போட்ட ட்வீட்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி ஆடி வருகிறது. இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஜாலியாக கிண்டல் செய்யும் வகையில், அமித் மிஸ்ரா போட்ட ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் ஜாம்பவான்

இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ஆடியுள்ள அமித் மிஸ்ரா, 2022 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஏலத்தில், 'Unsold' வீரராக அறிவிக்கப்பட்டிருந்தார். இதனால், முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல், வெளியே இருந்து போட்டிகளை கவனித்து வருகிறார். மொத்தம் 166 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள மிஸ்ரா, ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

அதே போல, ஐபிஎல் தொடரில் மூன்று முறை ஹாட்ரிக் எடுத்துள்ள ஒரே வீரரும் அமித் மிஸ்ரா தான். அப்படிப்பட்ட ஒரு வீரர், இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்ற போதும், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் குறித்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.

சிஎஸ்கே டீம்'ல ஆடுங்க ப்ளீஸ்..

அப்போது, ரசிகர் ஒருவர், "சார், ப்ளீஸ் சிஎஸ்கே அணிக்கு வாருங்கள்" என கமெண்ட் செய்திருந்தார். இதனைக் கவனித்த அமித் மிஸ்ரா, ரசிகரின் கேள்விக்கு மிகவும் ஜாலியாக, "மன்னிக்கவும். அதற்கு நான் இன்னும் இரண்டு வயது இளையவனாக உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

'டாடி ஆர்மி'

39 வயதாகும் அமித் மிஸ்ரா அப்படி குறிப்பிடுவதற்கான காரணம், சிஎஸ்கே அணியில் கடந்த சில சீசன்களாகவே, 30 வயதுக்கு மேலுள்ள வீரர்கள் அதிகம் ஆடி வருவது தான். தொடர்ந்து, தற்போதைய சீசனிலும் தோனி, உத்தப்பா, மொயீன் அலி, பிராவோ, ஜடேஜா உள்ளிட்ட பலர் முப்பது வயதுக்கு அதிகமானவர்களாகவே உள்ளனர்.

இதனால், சென்னை அணிக்கு 'டாடி ஆர்மி' என்ற பெயரும் உள்ளது. இதனைக் குறிப்பிட்டு தான், சிஎஸ்கே அணிக்காக நான் ஆட வேண்டும் என்றால், இன்னும் இரண்டு வயது இளையவனாக உள்ளேன் என அமித் மிஸ்ரா ரசிகரிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

AMIT MISHRA, CSK, IPL 2022, அமித் மிஸ்ரா, சிஎஸ்கே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்