'நான் விரக்தியான கிரிக்கெட்டரா?'... 'அடுத்த தலைமுறைக்காக சொல்றேன்.. நீங்க கொஞ்சம்'.. வீரரின் அனல் பறக்கும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகை போட்டியிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் வீரர் அம்பதி ராயுடு அதன் பின்னர் ஐதராபாத் அணிக்காக விளையாட தயார் என்று கூறியதை அடுத்து சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டிக்கான ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தார்.

அதுசமயம்தான், ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் மீது பல்வேறு அதிருப்தி புகார்களை அம்பதி ராயுடு முன்வைத்திருந்தார்.  அதன்படி அணியில் நிறையவே அரசியல் இருப்பதாகவும், இதனால் இந்த வருடம் ரஞ்சி சீசனில் ஐதராபாத் அணிக்காக விளையாடப் போவதில்லை என்றும், அதே சமயம் இதுகுறித்த புகார்களை ஐதராபாத் கிரிக்கெட் சங்க புதிய தலைவர் அசாருதீனிடம் கூறியதாகவும் ஆனால் அவர் எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்குமே சௌகரியமாக இருக்கும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தகுதிபடைத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் அம்பதி ராயுடு கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அசாருதீன்,  ‘அவர் ஒரு விரக்தியான ஆட்டக்காரர்’ என்று விமர்சித்துள்ளார்.

அசாருதீனின் இந்த விமர்சனத்தை அடுத்து, அவருக்கு பதில் அளித்த அம்பதி ராயுடு,‘இதை பர்சனலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஐதரபாத் கிரிக்கெட் சங்கத்தில் என்ன போய்க்கொண்டிருக்கிறது என்று நம் இருவருக்குமே தெரியும். அடுத்தடுத்து, எதிர்காலத்தில் வரவிருக்கும் கிரிக்கெட் தலைமுறைகளை காப்பாற்றுவதற்கேணும், தற்போது உருவாகியிருக்கும் இந்த சுத்தப்படுத்துதலுக்கான வாய்ப்பினை விட்டுவைத்துவிட்டு ஒதுங்கியிருக்க அறிவுறுத்துகிறேன்’ என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.

AZHARUDDIN MOHAMMED, AMBATIRAYUDU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்