திரும்பவும் சிஎஸ்கே டீம்க்காக ஆடணும்.. விருப்பப்பட்ட வீரர்.. இவரு வந்தா செமயா இருக்குமே
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக, மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் சிஎஸ்கே அணி தன்னை எடுக்க வேண்டும் என இந்திய வீரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான்காவது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது.
தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், இரண்டு புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்படவுள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதவுள்ள நிலையில், அதற்கு முன்பாக மெகா ஏலமும் நடைபெறவுள்ளது.
மெகா ஏலம்
இந்த ஏலம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், ஏற்கனவே உள்ள 8 அணிகளும், ஐபிஎல் விதிகளுக்கு உட்பட்டு, 2 முதல் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள வீரர்களை, ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுக்கவுள்ளனர். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் மொயீன் அலி ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அம்பத்தி ராயுடு
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த இந்திய வீரர் அம்பத்தி ராயுடு, மீண்டும் சென்னை அணியில் ஆட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 2018 முதல் 2021 வர சென்னை அணிக்காக ஆடியுள்ளார் அம்பத்தி ராயுடு. இதில், 2018 ஆம் ஆண்டு, சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல, அவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
சிஎஸ்கேவின் கம்பேக்
சிஎஸ்கே அணிக்காக மீண்டும் ஆடும் விருப்பம் பற்றி பேசிய அம்பத்தி ராயுடு, 'சிஎஸ்கே அணிக்காக நான் ஆடிய ஆட்டம், மிகவும் ஸ்பெஷல் ஆனது. இரண்டு முறை நாங்கள் கோப்பையைக் கைப்பற்றியுள்ளோம். ஒரு முறை இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றோம். 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பான சீசனாக அமைந்தது. மீண்டும் ஒரு முறை கம்பேக் கொடுத்த சிஎஸ்கே, அதே ஆண்டில் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
மிகுந்த மன வேதனை
அதே போல, 2019 ஆம் ஆண்டு இந்திய உலக கோப்பை அணியில், நான் தேர்வாகாமல் போனது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதில் இருந்து, என்னை மீண்டும் பார்முக்கு வர உதவியது சிஎஸ்கே தான். எனது சிறந்த ஆட்டத்தை நான் வெளிப்படுத்த காரணமாக இருந்தது, தோனி பாயின் தாக்கம் மட்டுமே. என்னிடம் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடம் ஒரு தாக்கத்தை உருவாக்கி, அவர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தோனி உதவுவார். அதனால் தான், இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த கேப்டன் என அவரை புகழ்கிறோம்.
நம்பிக்கையில் ராயுடு
நான் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக தான் ஆட விரும்புகிறேன். சிஎஸ்கே அணி சார்பாக, யாரும் இதுவரை என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஆனால், அவர்களால் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வெற்றிகரமான தொடரை ஆட வேண்டும் என்ற விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறேன்' என ராயுடு தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கங்குலி - தோனி.. இருவரில் யார் பெஸ்ட்?.. மனம் திறந்த ஹர்பஜன் சிங்..
- 'ஹர்திக் பாண்டியா' ரொம்ப வீக்.. "அவரு இனிமே அவ்ளோ தான் போல?.." முன்னாள் வீரர் கருத்தால் 'அதிருப்தி'..
- அதிகரிக்கும் ஒமைக்ரான்.. ஐபிஎல் 2022 எங்கு நடக்கும்??.. பிளான் பி ரெடி.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
- 'ஐபிஎல் 2022' மெகா ஏலம் எப்போது நடைபெறும்?.. வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்..
- 'சிஎஸ்கே'க்கு அடுத்த ருத்துராஜ் ரெடி?!.. "அந்த தங்கத்த சீக்கிரம் தூக்கிட்டு வாங்கப்பா.." இனி இருக்கு 'சரவெடி'!!
- "அடிபொளி சாரே!!".. அடுத்த சீசனுக்கும் மாஸான 'பிளான்' ரெடி!.. 'சிஎஸ்கே' வைத்த குறி?!.. எதிர்பார்ப்பில் 'ரசிகர்கள்'!!
- மறுபடியும் சிஎஸ்கே ஜெர்சியில் பார்க்க வாய்ப்பு இருக்கா..? ரசிகர்கள் எழுப்பிய கேள்வி.. உருக்கமாக ‘அஸ்வின்’ சொன்ன பதில்..!
- தோனியின் மானநஷ்ட வழக்கு: எதிர்த்த ஐபிஎஸ் அதிகாரி... மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
- ‘தோனி எனக்கு செய்த உதவி இருக்கே..! என்ன சொல்றதுன்னே தெரியல...’- உருகும் பிராவோ
- ‘அவரை ஏலத்துல எடுக்க ரொம்ப கடமை பட்டிருக்கோம்’.. ‘சின்ன தல’-ய விட முக்கியமான வீரர்..? சிஎஸ்கே சிஇஓ ஓபன் டாக்..!