‘முதல் போட்டியிலேயே 11 ஆண்டுகால ஐபிஎல் சாதனை முறியடிப்பு’.. வரலாறு படைத்த மும்பை வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர்களின் 11 ஆண்டுகால சாதனையை தனது முதல் போட்டியிலேயே மும்பை வீரர் அல்ஜாரி ஜோசப் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19 -வது போட்டி இன்று(06.04.2019) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான, வார்னர் 15 ரன்களிலும், பாரிஸ்டோவ் 16 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்களும் வந்த வேகத்தில் அடுத்தடுத்து அவுட்டாக 17.4 ஓவர்களில் 96 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இப்போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் வீரர் அல்ஜாரி ஜோசப் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளர், 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து 11 ஆண்டுகளாக சோஹல் தன்வீரின் சாதனையை முறியடித்துள்ளார். சோஹல் தன்வீரின் 2008 -ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘முக்கிய 3 மாற்றங்களுடன் களமிறங்கும் சூப்பர் கிங்ஸ்’.. தோனியின் மாஸ்டர் ப்ளானை சமாளிக்குமா அஸ்வின் படை?
- 'அவர் நம்ம டீம் கேப்டன்'...'அத மறக்காதீங்க'...வைரலாகும் சிவாஜி பட மீம்ஸ் வீடியோ!
- ‘எனக்கு என்ன சொல்றதுனே தெரியல’.. துரத்தும் தோல்வி ..மனமுடைந்த போன கேப்டன் கோலி!
- ‘காட்டுத்தனமாக போட்டு விளாசிய ரசல்’..‘மிரண்டு போன கோலி’.. வைரல் வீடியோ!
- ‘திடீரென விலகிய பிராவோ’..என்னாச்சு அவருக்கு?..ஷாக் கொடுத்த சிஎஸ்கே!
- ‘விமர்சனங்களுக்கு சிக்ஸர்களால் பதிலடி’..பொளந்து கட்டிய ‘கிங்’கோலி-மிஸ்டர் 360.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
- ‘வெளிப்படையாவே சொல்றேன், இதுல வெட்கப்பட என்ன இருக்கு’.. தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி வீரர்!
- ‘வில்லனா பாக்காதீங்க.. மனசாட்சி சுத்தம்’.. மன்கட் அவுட் விவகாரத்தில் மீண்டும் வெடிக்கும் ஐபிஎல் வீரர்!
- 'ஆர்.சி.பி'யவா கலாய்க்குற'...'உன்ன கொன்னுருவேன்'...இவருக்கா இப்படி மிரட்டல் வரணும்?
- 12 மணிநேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்.. அசால்ட் காட்டிய லசித் மலிங்கா..