10 வருசத்துக்கு முன்னாடி மெஸ்ஸி கூட ஃபோட்டோ.. இன்னைக்கி அவரு கூடயே உலக கோப்பையில் கோல்.. திரும்பி பாக்க வெச்ச இளம் வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

முதல் அரையிறுதி போட்டி சமீபத்தில் நடந்து முடிந்திருந்த நிலையில், அர்ஜென்டினா மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த அர்ஜென்டினா அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேறி இருந்தது.

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளதால், அந்த அணி கால்பந்து உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என உலகளவில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

லீக் சுற்றில், சவூதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இதனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி முன்னேறுமா என்றதும் திடீரென கேள்விக்குறியாகி இருந்தது. ஆனால், அதன் பின்னர் தொடர்ந்து வெற்றிகளை குவித்த அர்ஜென்டினா அணி, தற்போது இறுதி போட்டி வரை முன்னேறி உள்ளது, அந்த அணி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

அதே போல, கால்பந்து உலகில் நம்பர் 1 வீரரான மெஸ்ஸி, உலக கோப்பை இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்றும் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், கடைசி போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய கையோடு மெஸ்ஸி விடைபெற வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பத்துடன் உள்ளனர்.

முன்னதாக, அரையிறுதி போட்டியில் குரோஷியா அணிக்கு எதிராக முதல் கோலை மெஸ்ஸி அடித்திருந்தார். நடப்பு உலக கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார். மறுபக்கம், குரோஷியா அணிக்கு எதிராக அடுத்த 2 கோல்களை அடித்திருந்தார். இதில் ஒரு கோலுக்கு மெஸ்ஸி அஸ்சிஸ்ட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்படி அரையிறுதி போட்டியில் மெஸ்ஸி மற்றும் அல்வாரெஸ் ஆகியோர் உதவியுடன் அர்ஜென்டினா அணி இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியுடன் அல்வாரெஸ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தற்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு உலக கோப்பை கனவுகளுடன் இருந்த அல்வாரெஸ், தனது 12 ஆவது வயதில் மெஸ்ஸியுடன் ஒரு ஃபோட்டோவை கேட்டு சேர்ந்து எடுத்திருந்தார். அதே அல்வாரெஸ் பத்து ஆண்டுகள் கழித்து தற்போது அர்ஜென்டினா அணி உலக கோப்பையை கைப்பற்ற ஒரு படி முன் நிற்கும் இடத்திற்கு உயர்த்தி சென்ற விஷயம், பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

MESSI, ALVAREZ, FIFA WORLD CUP 2022, ARGENTINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்