பொல்லார்டு, ஜடேஜாவை ஏலத்தில் எடுக்க பயன்படுத்தப்பட்ட சைலன்ட் டை பிரேக்கர் ரூல்..அப்படின்னா என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் நாளை மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 12 மற்றும் 13) பெங்களூருவில் உள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனர்.

Advertising
>
Advertising

"30 பால்-ல 80 ரன் அடிக்கனும்னா..அவராலதான் முடியும்" - ஹர்பஜன் ஓப்பன் டாக்..!

ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலமெடுக்க ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 8 பழைய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம் என்பதால், சில அணிகள் 4 வீரர்களையும், சில அணிகள் மூவரையும், பஞ்சாப் கிங்ஸ் அணி இருவரை மட்டுமே என தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துவிட்டு, மற்ற வீரர்களை விடுவித்தன.

லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சமாக 3 வீரர்களை வாங்கலாம் என்பதால், அந்த இரு அணிகளும் தலா 3 வீரர்களை எடுத்துள்ளன.

இந்நிலையில் நாளை துவங்கவுள்ள இந்த மெகா ஏலத்தில் சைலன்ட் டை பிரேக்கர் என்னும் அரிய ரூல் பயன்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சரி அது என்ன ரூல் எனப் பார்த்துவிடுவோம்.

சைலன்ட் டை பிரேக்கர்

2010 முதல் சைலண்ட் டை பிரேக் முறை ஐபிஎல் ஏலத்தில் நடைமுறையில் இருந்தாலும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை. அதாவது ஒரு வீரருக்காக ஒரு அணி உரிமையாளர் ஒரு தொகைக்கு ஏலம் கேட்கும் பட்சத்தில் அவருக்கான வீரர்களை தேர்வு செய்ய ஒதுக்கப்பட்டிருந்த தொகை அத்துடன் காலி ஆகும் பட்சத்தில் இன்னொரு உரிமையாளரும் அதே தொகைக்கு அதே வீரருக்கு போட்டி போட்டால் அங்கு சைலண்ட் டை பிரேக் முறை பயன்படுத்தப்படும்.

அப்போது அணி உரிமையாளர்கள் அந்த குறிப்பிட்ட வீரருக்கு தாங்கள் மேலும் அதிகபட்சமாக எவ்வளவு தொகை கொடுக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். இந்த தனிப்பட்ட தொகை பிசிசிஐக்கு உரிமையாளர்கள் தர வேண்டியதாகும். ஆனால் இந்தத் தொகை அவர்கள் வீரர்களை தேர்வு செய்ய ஒதுக்கப்பட்டிருந்த தொகையில் இருந்து கழிக்கப்பட மாட்டாது. டை பிரேக் தொகைக்கு வரம்பு கிடையாது. இதிலும் டை ஆனால் மீண்டும் இதே நடைமுறை தொடரும்.

கிரண் பொல்லார்டு மற்றும் ரவீந்திர ஜடேஜாவை முதன்முதலில் ஏலத்தில் எடுக்கும் பொது இந்த ரூலை பயன்படுத்தித்தான் மும்பை இந்தியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸ்-ம் தங்களுக்கான வீரரை தங்கள் வசமாக்கிக்கொண்டனர்.

இருப்பினும் 2010 ஆம் ஆண்டு முதல் இந்த விதிமுறையை எந்த அணியும் பயன்படுத்தவில்லை. நாளை இந்த ரூலுக்கு  வேலை வருகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"பக்காவான பிளான்.. வெறித்தனமான கேப்டன்ஷிப்" - ரோஹித் ஷர்மாவை புகழ்ந்த பாகிஸ்தான் பிளேயர்..!

ALL YOU NEED TO KNOW ABOUT SILENT TIE BREAKER RULE, IPL AUCTION, IPL MEGA AUCTION, பொல்லார்டு, ஜடேஜா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்