'எப்போதும் 'தோனி'யே பினிஷிங்'...'கொடுப்பாருனு சொல்லிக்கிட்டு இருந்தா'?... கொந்தளித்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி, இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக உடைத்திருக்கிறது என கூறலாம்.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டியில் மழை குறிக்கிட்டதால், இந்தப் போட்டிகள் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 239 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.
இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகிய இருவரும் வெற்றிக்காக இறுதி வரை போராடியது அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனிடையே போட்டிக்கு பின்பு பேசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் '' இந்திய அணிக்கு 240 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் ஒன்றும் இல்லை. தொடக்கத்திலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை நியூசிலாந்து வீரர்கள் வீழ்த்தியது, இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது.
எப்போதுமே ரோகித் மற்றும் விராத் கோலி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை என கூற முடியாது. இதில் அனைவரின் பங்கும் இருக்கிறது. எப்போதும் அவர்கள் இருவரையும் சார்ந்திருக்க முடியாது. அதேபோன்று எப்போதும் தோனி வந்து போட்டியை முடித்து வைப்பார் என எதிர்பார்த்து கொண்டிருப்பது சரியல்ல.
தோனியும், ஜடேஜாவும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்தார்கள். ஏழாவது விக்கெட்டுக்கு 116 ரன் பார்டனர்ஷிப் என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் கேப்டன்ஸி அனைத்தையும் தவிடு பொடியக்கிவிட்டது'' என அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பவுண்ட்ரி லைனில் கேட்ச் பிடித்து அசத்திய ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ!
- 'மேட்ச்ல வந்து இப்படியா பண்றது'... 'ரசிகரின் செயலால் அதிர்ச்சி'... வெளியேற்றிய போலீசார்!
- ‘டிக்கெட் எடுத்த ரசிகர்களின் நிலை என்ன?... 'லைவ் அப்டேட் கொடுத்த சாக்ஷி தோனி'!
- 'மீண்டும் இன்று மழை வருமா??'... 'எந்த அணிக்கு சாதகம்??'
- 'மழைக்கு வாய்ப்பில்லை ராஜா'... 'அதான் இவரே சொல்லிட்டாரே'... உற்சாகத்தில் ரசிகர்கள்!
- ‘தொடர்ந்து ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால்’... 'செம்ம கடுப்பான கேப்டன் கோலி..!
- ‘இதுவரை எந்த கேப்டனும் செய்யாத சாதனை’.. செமி பைனலில் புது வரலாறு படைத்த ‘தல’தோனி!
- ‘மழையால் இந்தியாவுக்கு வந்த சோதனை’.. ஆனா இதுமட்டும் நடந்தா இந்தியா பைனல் போக வாய்ப்பு இருக்கு..! நடக்குமா..?
- ‘முக்கியமான விக்கெட்டை எடுத்தா இப்டிதான் பண்ணுவாரோ’.. வைரலாகும் விராட் கோலியின் வீடியோ!
- 'வர்லாம்.. வர்லாம்.. வா'... சஹலின் பந்துவீச்சில் வில்லியம்ஸை சுருட்டிய வீரர்... 'கேட்ச் மொமண்ட்'!