ஏகப்பட்ட 'ஆப்பரேஷன்' பண்ணியிருக்காரு...! திடீர்னு 'மயங்கி' விழுந்த 'நியூசிலாந்து' முன்னாள் கிரிக்கெட் வீரர்...! 'ரொம்ப மோசமான நிலைமை...' - கவலையில் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் இதயக் கோளாறு காரணமாக உயிருக்குப் போராடி வரும் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நியூஸிலாந்து அணியில் 1989 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கியவர் கிறிஸ் கெயின்ஸ். இவர் மொத்தம் 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், 2 டி-20 போட்டிகளில் விளையாடி ரசிகர்களை உற்சாக மூட்டியவர்.

கிறிஸ் கெயின்ஸ் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் லீக் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 2008-ஆம் ஆண்டு மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கிய கெய்ன்ஸ், மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஐபிஎல் நிறுவனர் லலித் மோடிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு அதில் வெற்றியும் பெற்றார்.

தற்போது 51 வயதாகும் கிறிஸ் கெய்ன்ஸுக்கு உடல்நலக்குறைவால் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சில நாட்கள் முன் கிறிஸ் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது கேன்பெரா நகரில் வைத்து இதயத்தில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறால் திடீரென மயங்கி விழுந்தார். தற்போது கேன்பெரேரா நகரில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியோடு அவருக்கு தீவிரமான சிகிச்சை தொடர்ந்து அளித்தும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. விரைவில் சிட்னியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு கெய்ன்ஸ் கொண்டு செல்லப்பட உள்ளார்.

கெய்ன்ஸின் நெருங்கிய நண்பரும், நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரருமான டியான் நாஷ் கெய்ன்ஸ் குறித்து கூறுகையில், 'கெய்ன்ஸ் ஒரு மிக சிறந்த வீரர். ஆனால், கடைசி காலத்தில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு நிறைய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவரின் தற்போதைய நிலையை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது' எனக் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்