டெஸ்ட் கிரிக்கெட்'ல இப்டி நடந்ததே இல்ல.. இது தான் ஃபர்ஸ்ட் டைம்.. இந்திய அணியில் நடந்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்கா : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சம்பவம், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அரங்கேறியுள்ளது.

Advertising
>
Advertising

இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.

இதனால், தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற, இரு அணிகளும் கடுமையாக போராடி வருகிறது.

வெற்றிக்காக போராட்டம்

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில், முதலில் ஆடிய இந்திய அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.

அதிரடி பண்ட்

சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இளம் வீரரான ரிஷப் பண்ட் மட்டும் தனியாளாக, அதிரடியுடன் ஆடி ரன்கள் குவித்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 100 ரன்கள் எடுத்து அசத்தினார். கடந்த போட்டியில், தன் மீது இருந்த விமர்சனங்களை இந்த போட்டியில், தவிடு பொடி ஆக்கினார்.

மீண்டும் சொதப்பல்

ஆனால், மறுபக்கம் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பில் இருந்தே அதிக விமர்சனத்தை சந்தித்து வரும் சீனியர் டெஸ்ட் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர், இந்த தொடரிலும் அதிகமாக சொதப்பலில் தான் ஈடுபட்டிருந்தனர். ஒரே ஒரு முறை தான், இருவரும் அரை சதமடித்திருந்தனர்.

அணியில் இருந்து நீக்குங்கள்

இதன் காரணமாக, இனிவரும் டெஸ்ட் தொடர்களில், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரை ஒதுக்கி வைத்து விட்டு, இளம் வீரார்களுக்கு, இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே, முதல் முறையாக ஒரு சம்பவம், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் அரங்கேறியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறை

இந்திய அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட்டான நிலையில், 20 விக்கெட்டுகளுமே கேட்ச் மூலம் தான் அவுட்டானது. மற்றபடி, போல்டு, எல்.பி.டபுள்யூ என எந்த முறையிலும் இது நிகழவில்லை.

இதற்கு முன்பாக, 5 முறை, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து, 19 முறை கேட்ச் முறையில் ஆட்டமிழந்துள்ளனர். ஆனால், 20 பேரும் அப்படி அவுட்டானதில் இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

VIRAT KOHLI, IND VS SA, TEST CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்