'அவங்க அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாங்க!'.. ஒரே வரியில் இந்திய அணியை... பங்கமாய் கலாய்த்த இங்கிலாந்து முன்னாள் வீரர் குக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் பலம் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் குக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அதன்பிறகு இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்று, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் இந்திய அணி வீரர்கள், இத்தொடரில் வெற்றிபெற்று தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனால் இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் அலெஸ்டர் குக் பேசியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், "பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதுபோல் தெரியவில்லை. பந்துகளை ஸ்விங் செய்யத் திணறி வருகிறார்கள். இது இங்கிலாந்து அணிக்குச் சாதகமான விஷயமாக அமையும். ஆகஸ்ட் மாதம் மைதானம் ஈரப்பதத்துடன் காணப்படும் என்பதால் இங்கிலாந்து பௌலர்களில் பந்துகளைச் சிறப்பாக ஸ்விங் செய்ய முடியும். இது இந்திய அணிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "இந்திய பேட்ஸ்மேன்களால் ஸ்விங் பந்துகளைச் சிறப்பாக எதிர்கொள்ள முடிவதில்லை. இது மிகப்பெரிய பலவீனம். இதனால், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி திணறும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்" என கூறினார்.

அலெஸ்ட் குக் கூறியது போலவே, சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பௌலர்கள் வீசிய ஸ்விங் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்