வார்னருக்கு 'மேன் ஆப் தி சீரிஸ்' கொடுத்தது அநியாயம்...! நியாயப்படி 'அவருக்கு' இல்ல கொடுத்துருக்கணும்...? - மனம் குமுறிய முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில் அதுதொடர்பான பல சர்ச்சை கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

Advertising
>
Advertising

ஐசிசி டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. அதில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் 173 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வென்றது.

இதில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்ததோடு இந்த தொடர் முழுதும் 289 ரன்களை எடுத்துள்ளார். இதன் காரணமாக டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்.

இதனை ஏற்காத பாகிஸ்தான் அணி வீரர்கள் அக்தர், தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது அநியாயம் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஷோயப் அக்தர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, 'டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் 303 ரன்களை எடுத்துள்ளார். ரன்கள் படி பார்த்தால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமுக்கு அல்லவா தொடர் நாயகன் விருதை அளித்திருக்க வேண்டும்.

இப்போது நடந்திருப்பது அநியாயம் தானே?. நிச்சயம் வார்னருக்குக் கொடுத்தது நியாயமற்றது. பாபர் ஆசம் டி-20 உலகக்கோப்பை தொடர் நாயகன் விருது பெறுவார் என ஆசையோடு எதிர்பார்த்தேன்' என வேதனையுடன் தெரிவித்துள்ளார் ஷோயப் அக்தர்.

மேலும், ஆட்ட நாயகன் விருது குறித்தும் கூறிய ஷோயப் அக்தர், 'மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

உண்மையில் பரிசீலிக்கப்பட வேண்டிய இன்னொரு வீரர் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா. இவர் இந்த தொடரில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாபர் ஆசம் 2021-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 303 ரன்களில் 28 பவுண்டரி 6 சிக்சர்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 125. ஆனால் வார்னர் லேட் ஆகத்தான் பார்முக்கு வந்து கடைசி 6 போட்டிகளில் 3 அரைசதங்களை விளாசியதும் குறிப்பிடத்தக்கது.

 

MAN OF THE SERIES, WARNER, AKHTAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்