‘உலகக் கோப்பை போட்டியில்’... ‘வேதனைப் பட்ட இந்திய வீரர்’... ‘ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் ஆன சோயிப் அக்தர், தனது யூடியூப் சேனலுக்கு இந்திய அணி வீரர்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

களத்தில் எதிரணி வீரர்களை மிரட்டி வந்த சோயிப் அக்தர், இந்திய அணியின் தற்போதைய வீரர்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்திய அணி உலகக் கோப்பை தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரானப் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், என்னால் இந்தியாவிற்கு சிறப்பாக விளையாட முடியவில்லை என மிகவும் வேதனைப்பட்டார்.

நான் அவரிடம், இதற்காக மனம் தளர வேண்டாம். உடற்தகுதியில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினேன். பின்னர், சில அறிவுரைகள் அவருக்கு வழங்கினேன். ஏனெனில், தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களில், ஷமிக்கு மட்டும் தான், ரிவர்ஸ் ஸ்வீங் (Reverse Swing) சிறப்பாக வருகிறது. ஆசிய துணைக் கண்ட ஆடுகளங்களில், இது மிகவும் முக்கியமானது என்று அவரிடம் கூறினேன். நீங்கள் ரிவர்ஸ் ஸ்வீங்கின் ராஜாவாக வலம் வரலாம் என்று ஷமிக்கு ஆலோசனை வழங்கினேன்.

இதையடுத்து தற்போது தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக, விசாகப் பட்டினத்தில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமே இல்லாத ஆடுகளத்தில் ஷமி, 5 விக்கெட்டுகள் எடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. துரதிருஷ்டவசமாக என்னிடம் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள், யாரும் ஆலோசனை கேட்பதில்லை. ஆனால் ஷமி போன்ற இந்திய பந்துவீச்சாளர்கள் என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

PAKISTAN, MOHAMMADSHAMI, SHOAIBAKHTAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்