'இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல...' அது எப்படிங்க எல்லா பந்தும் சிக்ஸர் அடிக்க முடியும்...? - இளம் வீரருக்கு சப்போர்ட் செய்த ஆகாஷ் சோப்ரா...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையே நடந்த மூன்று ஒரு நாள் ஆட்டத்தில் தன்னுடைய சிக்சர்களினால் விளசிய இளம் கிரிக்கெட் வீரரை முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணுகளுகிடையே மூன்று ஒருநாள் தொடர்கள் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா தன் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் துணைக்கொண்டு 2-1 என்ற வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மிகவும் விருவிருப்பாக எதிர்பாராத போட்டியாகவே இருந்தது என்று சொல்லலாம்.
அதில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த், கடைசி இரண்டு போட்டிகளில் களமிறங்கி 152 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 155 ரன்கள் குவித்தார். மொத்தம் 11 சிக்ஸர்களை பறக்கவிட்டு, ஒரு ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
தற்போது ரிஷப் பந்தை பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் பத்திரிகை ஒன்றில் பேசும் போது ரிஷப் பந்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அதில், 'ரிஷப் பந்த், தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பான முறையில் வழங்கி வருகிறார். அவர் பெரும்பாலும் ரிஸ்க் எடுத்து ஷாட்களை விளையாடுவதாகச் சிலர் விமர்சித்து வருகிறார்கள். ஒன்று சொல்ல வேண்டுமானால், ரிஷப்பின் பலமே அந்த ரிஸ்க்கி ஷாட்கள்தான். கிரிக்கெட் போட்டி பார்க்கும் நமக்கு தான் அது ரிஸ்க் போல தெரிகிறது. ரிஷப்பிற்கு அப்படியல்ல. அவர் தனித்துவமான வீரர்' என புகழாரம் சூட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, 'ஏபி டிவிலியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட் போன்றவர்கள் பந்துகளை மேலே தூக்கி அடிக்கும்போது, அவர்கள் ரிஸ்கி ஷாட்களை ஆடுகிறார்கள் என்றோம். தற்போது ரிஷப் பந்திற்கும் அதேதான் சொல்கிறோம். ரிஷப் அனைத்து பந்துகளையும் மேலே தூக்கி அடிக்க நினைக்கிறார்.
அது அனைத்தும் சிக்ஸர்களாகத்தான் பறக்கிறது. ஒரு சில பந்துகள் மட்டுமே சிக்ஸர்களாக செல்வதில்லை. அதற்காக அவரை விமர்சிப்பது நியாயம் இல்லை' எனவும் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த தனித்திறமையால் தான் ரிஷப் பந்த், 5ஆவது இடத்தில் களமிறங்கியதில் இருந்து, தற்போது 4ஆவது இடம்வரை முன்னேறிவிட்டார். அவர் இன்னும் ஒரு சதம் கூட விளாசவில்லை. விரைவில் அதிவேக சதத்தை எடுப்பார்' எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரு தோனியவே மிஞ்சிடுவாரு!.. கில்க்ரிஸ்ட்ட ஓரம் கட்டிருவாரு'!.. பங்காளி சண்டையை மறந்து... இந்திய அணி இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!
- 'யாரு ஜெயிச்சாங்க... யாரு தோத்தாங்க... அது முக்கியம் இல்ல'!.. அடுத்து யாரு ஜெயிக்கப் போறாங்கனு... இவங்க 2 பேரும் சொல்லாம சொல்லிட்டாங்க!.. போட்றா விசில!
- அம்பயர்ஸ் அட்ராசிட்டிஸ் முடிவுக்கு வந்தாச்சு!.. புதிதாக 2 விதிகளை அறிமுகப்படுத்திய பிசிசிஐ!.. 'அப்போ இனிமே யாரும் அம்பயர் கிட்ட சண்ட போட மாட்டங்களா'!?
- 'ஏன் சார் உங்கள இந்திய அணி டி20ல எடுக்கல'?.. ரசிகர்களின் மனங்களை கலங்கடித்த ஷிகர் தவானின் உருக்கமான பதில்!.. நெகிழ்ச்சி சம்பவம்!!
- VIDEO: ‘இந்த வருசம் இந்த ரெக்கார்டுக்கு தான் சீசன் போல’!.. அம்பயர் கையை UP-லயே இருக்க வச்சிட்டாரு மனுசன்..!
- "என்னோட டார்கெட்டே வேற மா"... 'அப்போ 2 வருஷமா... இந்த பிளான்-ஐ தான் போட்டு வச்சிருந்தாரா?"... 'ரொம்ப thanks புவி'!!
- ‘விடாமுயற்சி இருந்தா உங்களுக்கு அது கிடைக்கும்’!.. வெற்றிக் கோப்பையுடன் ‘நடராஜன்’ பதிவிட்ட உணர்ச்சிகரமான பதிவு..!
- VIDEO: கேட்ச்னா இது கேட்ச்...! 'எங்க வர்ற பந்த எப்படி பிடிக்குறார் பாருங்க...' - சான்ஸே இல்ல, வேற லெவல்...!
- 'நமக்கு தான் அவர் சுட்டிக் குழந்தை... ஆனா அவருக்கு ரொம்ப பெரிய மனசு'!.. சாம் கர்ரனின் உருக்கமான பேச்சு!.. 'நட்டு'வ பத்தி சுட்டிக்குழந்தை சொன்னது என்ன தெரியுமா?
- Delhi Capitals-க்கு பயிற்சியாளர் ஆன இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!