அட இங்கையுமா...! 'மேட்ச் நடந்திட்டு இருக்கப்போ...' 'அஜித் ஃபேன்ஸ் செய்த காரியம்...' - வைரலாகும் ஃபோட்டோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅஜித் நடிக்கும் வலிமை பட அப்டேட்டுக்கு இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் போர் கோடி தூக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவின் 'தல' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித், தற்போது எச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்துவருகிறது.
இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாவில் பலரை டாக் செய்து 'வலிமை' அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். இதுபோன்ற செயல் சில நாட்களில் ட்ரெண்டாக மாறி, நடிகர் அஜித் அவர்களே அறிக்கை விடும் அளவிற்கு மாறியது.
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் சிலர் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 'வலிமை' அப்டேட் கேட்டு போர்டு ஏந்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், 16-வது ஐரோப்பிய கால்பந்து தொடரான யூரோ கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் அஜித் ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் கேட்டுள்ளனர்.
அதோடு, தமிழ்நாட்டு வீரரான அஷ்வின் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சிலர் 'வலிமை' அப்டேட் கேட்டு கூச்சலிட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இங்க 'வலிமை அப்டேட்' இருக்கு மக்களே...! இதையே ஒரு அப்டேட்டா நெனச்சு கண்டிப்பா பண்ணுங்க...' - வைரலாகும் போட்டோ...!
- 'தம்பி அஜீத்குமாருக்கு வாழ்த்துகள்...' 'இளைஞர்களுக்கு ரோல்மாடலா இருக்காரு...' - நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை சொன்ன சீமான்...!
- "'சினிமா' என்னோட 'தொழில்'... சிலர் செய்யுற 'வேலை', என்ன வருத்தப்பட வைக்குது..." நடிகர் 'அஜித் குமார்' வெளியிட்ட 'அறிக்கை'!!
- VIDEO: ஐயா 'வலிமை அப்டேட்' சொல்லுங்கையா...! 'கையில போர்டு வச்சிட்டு நின்னு...' 'பிரதமர் மோடியிடம் கேட்ட அஜித் ரசிகர்கள்...' - வைரல் வீடியோ உள்ளே...!
- "இந்த மாதிரி நிறைய.. நிறைய .. நிறைய நடக்குது!".. 'அஜித்' பெயரை தவறாக பயன்படுத்தும் சிலர்!'.. உஷாரான 'தல'!.. உடனே வெளியான அறிக்கை!