"'இந்த' ஒரு விஷயத்த தான் அவரு 'சரி' பண்ணனும்... அப்படி மட்டும் பண்ணிட்டாருன்னா..." 'தோனி'க்கு advice சொன்ன முன்னாள் 'வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர்களிலேயே பலம் வாய்ந்த அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஐபிஎல்  சீசனில் மிக மோசமான பார்மில் உள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் சென்னை அணி ஆடியுள்ள நிலையில், மூன்றில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றாலும் கூட மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்தே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உருவாகும்.

இதுவரை விளையாடியுள்ள அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள பெருமையுடன் சிஎஸ்கே விளங்கும் நிலையில், இந்த முறை பிளே ஆஃப் சுற்று கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக, சிஎஸ்கே அணியின் ஆட்டம் மற்றும் தோனியின் கேப்டன்சி மிக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 'சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட் மூளைக்கு சொந்தக்காரர் தோனி தான். நிலைமைக்கு ஏற்ப சரியான முடிவை தோனி எடுப்பது என்பது அனைவருக்கும் அமைந்து விடாது' என்றார்.

மேலும், 'என்னைப் பொறுத்த வரையில் தோனி தற்போது செய்ய வேண்டியதெல்லாம் பேட்டிங் ஆர்டரில் ஐந்தாவது வீரருக்கு கீழிறங்கி ஆடாமல் இருப்பதே ஆகும். எந்தவொரு நிலைமையாக இருந்தாலும் அதற்கு கீழ் தோனி களமிறங்க கூடாது' என அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அணி தனது அடுத்த போட்டியில், வரும் 23 ஆம் தேதியன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்