மறுபடியும் RCB கேப்டன் ஆகிறாரா கோலி..? முன்னாள் வீரர் ‘சூசகமாக’ சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்பார் என நம்புவதாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

அதே தப்பு.. கோலி இனிமேல் இப்படி பண்ணாதீங்க.. கடுப்பான கவாஸ்கர் கொடுத்த வார்னிங்..!

விராட் கோலி

கடந்த 2013-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றுக்கொண்டார். இதுவரை 131 போட்டிகளில் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 60 வெற்றிகள், 64 தோல்விகள். ஆனாலும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 2016-ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.

ஆர்சிபி கேப்டன்

இந்த சூழலில் கடந்த ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகினார். அதனால் அந்த அணிக்கு அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்பட உள்ளார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் வீரர் கருத்து

இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘விராட் கோலி கேப்டன் பதவியை ஏற்க முடிந்தால், அவர் அதைச் செய்ய மகிழ்ச்சியாக இருந்தால், ஆர்சிபி அணிக்கு அது எளிதான தீர்வாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என அஜித் அகார்கர் கூறியுள்ளார்.

வலுவான மிடில் ஆர்டர் இல்லை

தொடர்ந்து பேசிய அவர், ‘ஆர்சிபி அணி 12, 13 அல்லது 14 வீரர்களை கொண்ட சரியான அணியை உருவாக்க போதுமான பணத்தை முதலீடு செய்யவில்லை. அந்த அணி எப்போதும் முதல் மூன்று வீரர்களை சார்ந்தே இருக்கிறது. போதுமான மிடில் ஆர்டர் வீரர்கள் இல்லை. உங்களிடம் பணம் இல்லையென்றால், அதை மீண்டும் செய்ய முடியாது. ஒரு வீரருக்கு நீங்கள் அதிகம் முதலீடு செய்தால் அவர் எவ்வளவு சிறந்தவர் என்பது முக்கியமல்லை. அவர் உங்கள் விளையாட்டுகளை வெல்வார், ஆனால் உங்களுக்கு கோப்பையை வென்று தர மாட்டார்’ என அஜித் அகார்கர் கூறியுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம்

வரும் பிப்ரவரி 12, 13 தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. முன்னதாக விராட் கோலியை 15 கோடி ரூபாய்க்கும், மேக்ஸ்வெல்லை ரூ.11 கோடிக்கும், முகமது சிராஜை ரூ.7 கோடிக்கும் ஆர்சிபி அணி தக்கவைத்தது.

மீண்டும் கேப்டன் ஆகிறாரா விராட் கோலி?

அதனால் கேப்டன் பொறுப்புக்காக ஏலத்தில் புதிதாக ஒரு வீரரை ஆர்சிபி அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விராட் கோலி மீண்டும் அணியை வழிநடத்த ஒப்புக்கொண்டால், ஒரு வீரருக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. அந்த பணத்தில் இளம் வீரர்களை அணியில் எடுக்கலாம். இதை குறிப்பிட்டுதான் அஜித் அகார்கர் கூறியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. சிரிச்சிக்கிட்டே ரோஹித் சொன்ன வார்த்தை.. எகிறும் எதிர்பார்ப்பு..!

AJIT AGARKAR, KOHLI, RCB CAPTAIN, INDIA FAST BOWLER AJIT AGARKAR, VIRAT KOHLI, CAPTAINCY, RCB IN IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்