"Ground-அ விட்டு வெளியே போ"... துடுக்காக பேசிய இளம் வீரர்.. கொந்தளித்த கேப்டன் ரஹானே.. தீயாய் பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதுலீப் கோப்பை இறுதி போட்டியில் வாய்துடுக்காக பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை, மைதானத்தில் இருந்து ரஹானே வெளியேறச் சொல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போட்டி
துலீப் கோப்பை இறுதி போட்டி கோவையில் நடைபெற்று வந்தது. இதில் மேற்கு மற்றும் தெற்கு மண்டல அணிகள் களம்கண்டன. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டல அணி 96.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 83.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. தெற்கு மண்டல அணி தரப்பில் இந்திரஜித் 118 ரன்கள் குவித்தார். அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 128 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான சர்ப்ராஸ் கான் 127 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தெற்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. ஆனால், 71.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தெற்கு மண்டல அணியின் ரவி தேஜா பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, அவருக்கும் யஷஸ்வி-க்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, யஷஸ்வி தேஜாவை திட்ட, தேஜா இதுகுறித்து நடுவரிடம் புகார் அளித்தார். பின்னர் நடுவர் இந்த விஷயத்தை மேற்கு மண்டல அணியின் கேப்டன் ரஹானேவிடம் கொண்டுசென்றார். அப்போது, யஷஸ்வியை சமாதானம் செய்தார் ரஹானே.
வெளியேறிய யஷஸ்வி
ஆனால் மீண்டும் யஷஸ்வி அதேபோல, ரவி தேஜாவிடம் வாய்துடுக்காக பேச, ரஹானே கோபமடைந்தார். அப்போது, யஷஸ்வியை மைதானத்தை விட்டு வெளியேறும்படி அவர் கூறவே, யஷஸ்வியும் வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. அதேநேரத்தில் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக யஷஸ்வி தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யாருப்பா அந்த பையன்?’.. அம்பயர் அவுட் கொடுக்குறதுக்கு முன்னாடியே வெளியேறிய வீரர்.. பாராட்டும் ரசிகர்கள்..!
- Ajinkya Rahane.. வை தூக்கி வெளியே வீசியிருப்பேன்.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆவேசம்
- தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ரஹானேவுக்கு பதில் இவரா?- கே.எல்.ராகுல் ஓப்பன் டாக்
- 'இனி கஷ்டம்தான்': இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனுக்கு ஜாகிர் கான் கொடுத்த வார்னிங்!
- ‘என்ன கேப்டன் இப்டி பண்ணிட்டீங்க… நம்பிக்கையே போச்சு..!’- இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் மேட்ச்சால் புலம்பும் ட்விட்டர்வாசிகள்..!
- அங்க வச்சு 'எப்படி' விளையாடுனார்னு நியாபகம் இருக்கா...? அவருக்கெல்லாம் 'ஒரு மேட்ச்' போதும்...! - சக வீரருக்கு 'சப்போர்ட்' செய்த புஜாரா...!
- என்னங்க இப்டி சொல்லிட்டீங்க..! ‘இவர்’ கேப்டனா இருக்கலாமா? வேணாமா?- என்ன சொல்ல வர்றார் ஆகாஷ் சோப்ரா?
- இவரா...? இல்ல அவரா? டி20 மேட்ச்க்கு ஓகே! டெஸ்ட்-க்கு யாருப்பா கேப்டன்..?- பெரும் குழப்பத்தில் பிசிசிஐ…!
- “இந்த மனுசன் கிட்ட வீரர்கள் எல்லாம் பயப்படுறாய்ங்க!”.. “அவர் கேப்டன்சியில கூலா இருக்காங்க!”.. இந்திய அணி கேப்டன்சி பற்றி ஆஸி வீரரின் ‘அதிரடி’ கருத்து!
- ‘அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே’... ‘ஆஸி. ஊடகங்களை தவிடுபொடியாக்கி’... ‘முதல் ஆளாக இந்திய கேப்டன் ரஹானே செய்த சாதனை’...!!!