‘அவருக்கு மட்டும் நாட் அவுட்’... ‘ரஹானேவுக்கு மட்டும் ரன் அவுட்டா?’... ‘கொந்தளித்த ரசிகர்கள்’... ‘சர்ச்சைக்குள்ளான விதி குறித்து’... ஜாம்பவான் சச்சின் கருத்து...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரன் அவுட் வழங்கிய டிஆர்எஸ் முறை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கும், இந்திய அணி 326 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதில் இந்திய அணி 3-வது நாள் ஆட்டமான இன்று, முதல் இன்னிங்சில் விளையாடியபோது, 100-வது ஓவரில் ரஹானே ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால், ரன் அவுட் குறித்த மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து அம்பயர்ஸ் கால் அளித்தார். இதையடுத்து கள நடுவர் ரன் அவுட் என்று அறிவித்தார்.
ஆனால், டிவி ரீப்ளேவில் ரஹானேவின் பேட் கிரீஸைத் தொட்டது நன்றாகத் தெரிந்தது. ஆனாலும், ரஹானேவுக்கு அவுட் வழங்கப்பட்டது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விளையாடியபோது கேப்டன் பெய்னுக்கு ரன் அவுட் குறித்து மூன்றாவது நடுவருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, டிம்பெய்ன் தனது பேட் கிரீஸைத் தொட்டது உறுதி செய்யப்படாத நிலையில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்குத் தர வேண்டும் என்பதால், அவருக்கு அவுட் வழங்கவில்லை. அதேபோன்ற சந்தேகத்தின் பலன் ரஹானேவுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரஹானாவுக்கு ஒரு நியாயம், ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்னுக்கு ஒரு நியாயமா என நெட்டிசன்கள் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர். ‘இது ஏமாற்றுத் தனம்’ என்றும், ‘ஏமாற்றுத்தனம், பெய்னுக்கு பெய்ன் (வலி) ஏற்படவில்லை. ஆனால், ரஹானேவுக்குக் கொடுமையான முடிவு’ என்றும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர், சச்சின் டெண்டுல்கர் இதுகுறித்து கூறுகையில், ‘வீரர்கள் டிஆர்எஸ் முறையை எடுக்கும் விஷயத்தில் ஐசிசி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். சில முடிவுகளால் வீரர்கள் அதிருப்தி அடைகின்றனர். அம்பயர்ஸ் கால் குறித்து தெளிவான விதிமுறைகள் ஏதும் இல்லை.
சில நேரங்களில் பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கப்படுவதில்லை. சில முக்கியமான தருணங்களில் அவுட் வழங்கப்படுகிறது. களத்தில் உள்ள நடுவர்கள் எடுக்கும் முடிவால் வீரர்கள் அதிருப்தி அடைவதால், டிஆர்எஸ் முறையை முழுமையாக ஆய்வு செய்யக் கூறுகிறோம். குறிப்பாக டிஆர்எஸ் முறையில் அம்பயர்ஸ் கால் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதுக்கு பேரு உலகின் சிறந்த டி20 அணியா?’...‘இது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் அணி’... ‘ஐசிசியை பயங்கரமாக கலாய்த்து’... ‘கடுமையாக சாடிய முன்னாள் வீரர்’...!!!
- ‘அதிரடி காட்டிய நேரத்தில்’... ‘திடீரென பாதிப் போட்டியில் வெளியேறிய இந்திய வீரர்’... ‘இந்திய அணிக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்’...!!!
- நல்லா போய்ட்டு இருந்த மேட்ச்.. ‘இப்டி’ ஆகும்னு எதிர்பார்க்கல.. குற்றவுணர்ச்சியில் ‘தலைகுனிந்த’ ஜடேஜா.. கொஞ்சமும் கோபப்படாம ‘ரஹானே’ செய்த செயல்..!
- "அத நான் சொல்லிட்டா... அப்புறம் 'எனக்கு' தான் தேவையில்லாத 'வம்பு'..." 'சுனில் கவாஸ்கர்' சொன்ன பரபரப்பு 'கருத்து'!!!
- ‘திறமையாக திட்டம் போட்டு’... ‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிச்சுருக்காரு’... ‘கொஞ்சம் கூட மனதில் சுமையில்ல’... ‘புகழாரம் சூட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்’...!!!
- ‘அறிமுகப் போட்டியிலேயே அதகளம்’... ‘இன்னொரு ஃபாஸ்ட் பவுலர் இந்திய அணிக்கு கிடைச்சாச்சு’... ‘இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய’... ‘ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன்’...!!!
- 'நீ விளையாடு...' 'அப்பாவோட உடலை பார்க்க வர வேண்டாம்பா...' மனச கல்லாக்கிய அம்மா...' - அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய முகமது சிராஜ்...!
- VIDEO: "அது நிச்சயம் 'அவுட்' தான்... தேர்ட் அம்பயரும் தப்பு பண்ணிட்டார்!" - சர்ச்சைக்குள்ளான ரன் அவுட்... அம்பயர்களை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!!
- 'சீனியர் வீரர்கள் விக்கெட்டை’... ‘15 நிமிடங்களில் வீழ்த்தி’... ‘இந்திய அணியை மிரள வைக்கும் நடராஜன்’...!!!
- ‘சிட்னியில் திட்டமிட்டப்படி 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா?’... ‘எழுந்துள்ள புதிய சிக்கல்’... ‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசனை’...!!!