‘அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே’... ‘ஆஸி. ஊடகங்களை தவிடுபொடியாக்கி’... ‘முதல் ஆளாக இந்திய கேப்டன் ரஹானே செய்த சாதனை’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுல்லாக் விருது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், ஆஸ்திரேலியர் ஒருவர்தான் இந்த விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியரான ரஹானே முதல் ஆளாக வென்றிருக்கிறார்.
முதல் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியதுடன் கேப்டன் விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், கேப்டனாக பொறுப்பேற்று ரஹானே தலைமையில் இந்திய அணி பாக்ஸிங் டே டெஸ்டில் களமிறங்கியது. தொடக்க முதலே தனது அபார பந்து வீச்சின் மூலம் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் விருதை ரஹானே வென்றார்.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்படும் வீரருக்கு முல்லாக் விருது வழங்கி கௌரவிக்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதையடுத்து இரண்டாது டெஸ்டில் சதம் அடித்த அஜிங்கிய ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராக அந்த விருதை அவர் தட்டிச் சென்றார்.
முல்லாக் என்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர். அவரது நினைவாக இந்த விருது, இந்த ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரேலிய வீரர்கள் தான் வாங்குவார்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் மார்தட்டின. இதனை தவிடுபொடியாக்கி இந்தியாவின் பொறுப்பு கேப்டன் ரஹானே தட்டிச்சென்றுள்ளார். இந்த விருதினை பெரும் முதல் இந்தியர் இவரே.
ஜானி முல்லாக் இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரை சேர்ந்தவர். 1868-இல் உருவாக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர் ஜானி முல்லாக். இந்த பழங்குடியினர் அணி அதே ஆண்டே தனது முதல் சர்வதேச பயணத்தை பிரிட்டன் மேற்கொண்டு பல போட்டிகளில் பங்கேற்றது.
ஆஸ்திரேலியா அணி உலக அரங்கில் தங்களது திறமையை வெளிப்படுத்த ஜானி முல்லாக் மற்றும் அவரது பழங்குடியினர் அணி முக்கிய பங்காற்றியது. ஜானி முல்லாக் 1868 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 47 போட்டிகளில் 45 போட்டிகளில் பங்கேற்றார். அதில் 1,698 ரன்களை எடுத்ததுடன் 23.65 சராசரி மற்றும் 245 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தேங்க்ஸ் டா தம்பி’!.. ‘நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்’.. ஆமா அவருக்கு தமிழ் தெரியுமா..? நெட்டிசன்களை பரபரப்பாக்கிய அஸ்வின்..!
- 'என் கரியர்ல யாரையும் இத பண்ணவிட்டதில்ல!!!'... 'அந்த இந்திய பவுலர் மட்டும் தான்'... 'வருத்தத்துடன் பகிர்ந்த ஆஸி. வீரர்!!!'...
- '50 ஆண்டுகளில் முதல்முறை!!!'... 'அறிமுக போட்டியிலேயே அசத்தல் சாதனையுடன்'... 'ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த இந்திய பவுலர்!!!'...
- ‘முரளிதரன் சாதனையை முறியடித்து’... ‘அசத்திய தமிழக சீனியர் வீரர்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!!
- 'அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்!!!... 'மாற்றுவீரராக களமிறங்கப்போவது இவர்தானா???'... 'வெளியான எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்?!!'...
- ‘அணியில் இணைய உள்ள சீனியர் வீரர்’... ‘கேப்டன் சொன்ன நம்பிக்கை தகவல்’... ‘நாளை முதல் அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்திய அணி’...!!!
- 'சம்பளம் வாங்குறதுல...' 'கோலி, ரோஹித் சர்மாவை ஓவர்டேக் செய்த இந்திய வீரர்...' - கோலியை பின்னுக்கு தள்ளியதற்கான காரணம்..!
- "என்னோட ஓய்வு முடிவ 'வாபஸ்' பண்ணுங்க..." கோரிக்கை வைத்த 'யுவராஜ் சிங்'... பதிலுக்கு 'பிசிசிஐ' சொன்னது என்ன??... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!!
- 'இப்படியா எல்லாத்தையும் கோட்டை விடுறது???'... 'அவர மட்டும் 5 முறை அவுட்டாக்கி இருக்கலாம்?!!'... 'போட்டிக்குப்பின் புலம்பிய ஆஸி. வீரர்!!!'...
- ‘அவருக்கு மட்டும் நாட் அவுட்’... ‘ரஹானேவுக்கு மட்டும் ரன் அவுட்டா?’... ‘கொந்தளித்த ரசிகர்கள்’... ‘சர்ச்சைக்குள்ளான விதி குறித்து’... ஜாம்பவான் சச்சின் கருத்து...!!!