அஜாஸ் படேல் நீக்கம் ஏன்?... 10 விக்கெட் எடுத்தும் வந்த சோதனை.. அவரே சொன்ன விளக்கம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி 20 தொடரில் பங்கு பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

இதில், இரண்டு தொடர்களையும் இந்திய அணி வென்றிருந்த நிலையில், நியூசிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர், அசத்தலான சாதனை ஒன்றை புரிந்து, கிரிக்கெட் உலகில் தன்னை பதிவு செய்து கொண்டார். இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 325 ரன்கள் எடுத்திருந்தது. இதில், 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் எடுத்து சாதனை புரிந்திருந்தார்.

ஒரே இன்னிங்ஸில், 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற அரிய சாதனையின் மூலம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் மீது திரும்பச் செய்தார். இதற்கு முன்பாக, ஜிம் லேக்கர் மற்றும் அணில் கும்ப்ளே மட்டும் தான் இந்த சாதனையை புரிந்திருந்தனர். சிறந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் நியூசிலாந்து அணிக்கு கிடைத்த நிலையில், வரும் காலங்களில் நிச்சயம் பல சாதனைகளை படைப்பார் என அனைவரும் கருதினர்.

ஆனால், அஜாஸ் படேலுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நியூசிலாந்து அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்காக, 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணியை அறிவித்திருந்தது. ஆனால், இதில் அஜாஸ் படேல் பெயர் இடம்பெறாமல் போனது, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுபற்றி பேசிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட், 'இது அஜாஸுக்கு நிச்சயம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருக்கும். மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளருக்கு இது நடந்துள்ளது. நிச்சயம் ஏதாவது ஒரு காரணத்தின் பெயரில் தான் தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்திருக்கும்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது பற்றி பேசிய அஜாஸ் படேல், 'இது நிச்சயம் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். ஏனென்றால், உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தான், உங்களது திறனை வெளிப்படுத்தி, நியூசிலாந்து அணிக்காக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் ஆட எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை வெளிக் காட்ட முடியும்.

நான் தேர்வாகாமல் போனது பற்றி, எனது பயிற்சியாளர் கேரியிடம் கலந்துரையாடினேன். இதனால், நம் நிலை என்பது பற்றி அறிந்து வைத்துக் கொள்ள முடியும். எனது கிரிக்கெட் கேரியரில் ஒவ்வொரு முறையும் நான் பின்னடைவு அல்லது ஏமாற்றத்தை சந்திக்கும் போது, இலக்கை இன்னும் வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கை உருவாகும். இதனால், அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது, என்னை பொறுத்தவரையில், திரும்பிச் சென்று, எனது ஆட்டத்தின் அனைத்து அம்சங்களையும் இன்னும் மேம்படுத்த ஒரு வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன்' என அஜாஸ் படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

NEWZEALAND CRICKET, AJAZ PATEL, NZ VS BAN, அஜாஸ் படேல், நியூசிலாந்து கிரிக்கெட், சாதனை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்