என்ன கொடுமை அஜாஸ் படேல்! 10 விக்கெட் எடுத்தும் பயனில்லையே ராஜா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜாஸ் படேல் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்தார். அவர் யாரும் எதிர்பாராத விதமாக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை புரிந்தார். டெஸ்ட் போட்டிகளில் வரலாற்றிலேயே இதுவரை மூன்று பேர் தான் இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். இதனால் அவரின் புகழ் உச்சத்தைத் தொட்டது.
தன் கிரிக்கெட் வாழ்க்கையை வேகப் பந்து வீச்சாளராக ஆரம்பித்தவர் அஜாஸ் படேல். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுழற் பந்து வீச்சுக்குத் தன்னைத் தானே மாற்றிக் கொண்டார். இப்படி பல சுவாரஸ்யங்கள் நிறைந்த கிரிக்கெட் வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான அஜாஸ், இனி வரும் காலங்களில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சார்பில் அதிகம் விளையாடுவார் என்றும், பல சாதனைகளை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நடந்துள்ளது வேறு.
வங்க தேச அணிக்கு எதிராக நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விரைவில் விளையாட இருக்கிறது. இதற்கான 13 பேர் கொண்ட டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம். அந்த 13 பேரில் அஜாஸ் படேலுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்சல் ஆகியோரை மட்டுமே டெஸ்ட் தொடரில் சுழற் பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளது. இந்த அதிர்ச்சி அறிவிப்பு குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், ‘உண்மையில் இது அஜாஸுக்கு துரதிர்ஷ்டமான செய்தியாகத் தான் இருக்கும். வரலாறு படைக்கும் விதத்திலான பந்து வீச்சுக்குப் பின்னர் இது நடந்துள்ளது. அதே நேரத்தில் தேர்வு வாரியம் இப்படியான முடிவை எடுப்பதற்கு நிச்சயம் காரணம் இருக்கும்.
வங்க தேச அணி நியூசிலாந்துக்கு வந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு ஏற்ற வகையில் தான் அணித் தேர்வும் நடந்துள்ளது. டேரில் மற்றும் ரச்சின் ஆகியோர் அணிக்கு ஒரு பேலன்ஸ் தருகிறார்கள். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அவரு ஒண்ணும் இங்க பெருசா சாதிக்கலையே!”- அஸ்வினை சீண்டும் தென் ஆப்பிரிக்கா கேப்டன்
- 'நானும் நீயும் மௌனத்தில் பேசணும்...' தன் குழந்தையை அள்ளியபடி புவ்னேஷ்வர் குமார்!
- பாகிஸ்தான் அணியில இவங்க 3 பேரையும் மறக்கவே முடியாது!- அஸ்வின்
- 'பட் அவரோட ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு': தொடரும் விராட் கோலி- சவுரவ் கங்குலி மோதல்
- 'இனிமே தான் தரமான சவால்கள் எல்லாம் காத்திட்டு இருக்கு ஷ்ரேயாஸ்'- கங்குலியின் எச்சரிக்கையா? ஆலோசனையா?
- 'அந்த ஒரு வரி... அதிகாரத்தில் இருக்கும் சிலருக்குப் பிடிக்காமல் போயிருக்கும்'- வருத்தப்படும் கவாஸ்கர்
- ‘என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ஒரு வரமுறை வேண்டாம்... கோலியோட உரிம அது..!’- குரல் கொடுக்கும் இந்திய வீரர்
- 'நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா யார் தெரியுமா?'- விராட் ப்ரஸ் மீட்-க்குப் பின் வைரலாகும் ஜடேஜாவின் ட்வீட்!
- '4 வருஷத்துக்கு அப்றம் வந்திருக்காரு... அவ்ளோ சீக்கிரம் நீங்க ஒதுக்கிட முடியுமா?'- கங்குலியை திகைக்க வைத்த 'அந்த' பவுலர் யார்?
- 'யம்மாடியோவ்..! என்னா அடி..!'- கோலிக்கு நிகரான சாதனையை அசால்ட்டாகப் பதிவு செய்த ருதுராஜ்!