"நீங்க இப்படி பண்ணா, ஜடேஜா நெலம என்ன ஆகுறது??.." தோனியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்கள்.. 'CSK'வில் அடுத்த தலைவலி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது.

Advertising
>
Advertising

"எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்??.." CSK'வுக்கு எதிரான போட்டியில்.. கவுதம் கம்பீர் செய்த காரியம்..

முன்னதாக, இந்த தொடரின் அறிமுக போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி மோதி இருந்தது.

இந்த போட்டியில், 131 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்திருந்த நிலையில், இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி வெற்றி பெற்றிறுந்தது.

தொடர் தோல்விகள்..

இதனையடுத்து, நேற்று (31.03.2022) லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்றிருந்த போட்டியில், சென்னை அணி 210 ரன்கள் அடித்திருந்த போதும், கடைசியில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டும் சொதப்பியதால், லக்னோ அணி மூன்று பந்துகள் மீதம் வைத்து, சென்னை அணியை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

ஒரு ஐபிஎல் தொடரில், முதல் இரண்டு போட்டியிலும் சென்னை அணி தோல்வி அடைவது இது தான் முதல் முறை. முன்னதாக, ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்க சரியாக இரண்டு நாட்கள் இருந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருந்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

தோனி மீது விமர்சனம்

இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இன்னொரு பக்கம், சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டிருந்தார். இதனிடையே, தோனியின் செயல்பாடு குறித்து, முன்னாள் இந்திய வீரர்கள் குற்றம் சுமத்தி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு மேட்ச் ஆகல..

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிக் கொண்டாலும், தொடர்ந்து போட்டியின் போது, பல முடிவுகளை அவர் தான் எடுத்து வருகிறார். இது பற்றி பேசிய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, "லீக் சுற்றின் கடைசி போட்டியாக இருந்தாலோ, அல்லது அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற நெருக்கடி இருந்தாலோ, தோனி முடிவு எடுப்பது சரி ஆகும். ஆனால், இது லீக் சுற்றின் இரண்டாவது போட்டி. இதனால், தோனி செய்வது தவறு தான். என்னை விட பெரிய தோனி ரசிகன் யாரும் இருக்க முடியாது. இருந்த போதும் எனக்கே, தோனியின் இந்த செயல்பாடு பிடிக்கவில்லை" என விமர்சனம் செய்துள்ளார்.

அப்ப தான் ஜடேஜா கத்துக்குவாரு..

அதே போல, மற்றொரு முன்னாள் வீரரான பார்த்தீவ் படேலும் தோனியின் முடிவை விமர்சித்துள்ளார். "புதிய தலைவரை உருவாக்குவது தான், உங்களின் ஆலோசனை என்றால், நீங்கள் அவருக்கு முதலில் அதிக சுதந்திரம் வழங்க வேண்டும். அணியை வழிநடத்த ஜடேஜாவை அனுமதித்தால் மட்டுமே அவரால் ஒரு கேப்டனாக மாற முடியும். தவறுகள் செய்யும் போது தான், அதிலிருந்து ஜடேஜா கற்றுக் கொள்வார்" என தெரிவித்துள்ளார்.

அஜய் ஜடேஜா மற்றும் பார்த்தீவ் படேலை போல, மேலும் சில கிரிக்கெட் பிரபலங்களும், தோனியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் அப்டேட் கொடுத்த சிஎஸ்கே கோச்.. அப்படின்னா அடுத்த மேட்ச்ல இவரை பாக்கலாம் போலயே..!

CRICKET, IPL, AJAY JADEJA, PARTHIV PATEL, MS DHONI, CSK, IPL2022, ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி, ஜடேஜா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்