"அவர அப்படி பாத்ததே கிடையாது".. இரண்டு நாளா தூங்காம இருந்த சச்சின்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு பவுலர் தான் காரணமாம்"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது.

Advertising
>
Advertising

இதுவரை இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டிலுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி அசத்தி உள்ளது.

ரோஹித், விராட் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படிருந்த நிலையில், கே எல் ராகுல் தலைமையில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறது.

இதனிடையே, முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது நடந்த சம்பவம் ஒன்றை குறித்து தற்போது சில தகவலை பகிர்ந்துள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு, இந்தியா, ஜிம்பாப்வே, இலங்கை ஆகிய அணிகள், கோகோகோலா சாம்பியன்ஸ் டிராபி முத்தரப்பு தொடரில் மோதி இருந்தது. இந்த தொடரில், ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகள் மோதி இருந்த போட்டி ஒன்றில், ஜிம்பாப்வே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஒலோங்கோ, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் மற்றும் அஜய் ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்து அசத்தி இருந்தார். மேலும் அந்த போட்டியில், ஜிம்பாப்வே அணி வெற்றியும் பெற்றிருந்தது.

அந்த சமயத்தில் நடந்த சம்பவம் ஒன்றை தற்போது நினைவு கூர்ந்த அஜய் ஜடேஜா, "ஹென்றி ஒலோங்கோ வீசிய பந்தில், 11 ரன்களில் அவுட்டாகி இருந்தார் சச்சின். அவர் அவுட்டான பந்து, கடுமையாக அவரை பாதிக்கவும் செய்திருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் இதை நினைத்து அவர் தூங்கவே இல்லை. இரவு முழுவதும் வருத்தத்துடன் இருந்த சச்சினை நாங்கள் இதுவரை அப்படி பார்த்ததே இல்லை.

இரண்டு நாட்களாக காத்துக் கொண்டிருந்த சச்சின், இறுதி போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆடியது, அப்படியே ஒரு திருப்பமாக அமைந்திருந்தது. அது தான் பின்னர் அவரை மாற்றியது" என்ன அஜய் ஜடேஜா கூறினார்.

அவர் சொன்னது போலவே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இறுதி போட்டியில், 92 பந்துகளை எதிர்கொண்ட சச்சின், ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், 30 ஓவர்களில் இலக்கை எட்டியது இந்திய அணி. அதே போல, ஒலோங்கோ இந்த போட்டியில் 6 ஓவர்கள் பந்து வீசி, விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் 50 ரன்கள் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

SACHIN TENDULKAR, AJAY JADEJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்