முடிவுக்கு வந்த காத்திருப்பு.. இனி இவரு தான் கேப்டன்.. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்விக்கு இறுதியில் தற்போது விடை கிடைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அம்மாவாக போகிறார்".. தோழியை கரம்பிடித்த பிரபல கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லரின் எமோஷனல் பதிவு.. வாழ்த்தும் லெஜெண்ட்ஸ்..!

கடந்த டிசம்பர் மாதம், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றிருந்தது. இதில் மொத்தமுள்ள 10 அணிகளுமே ஏராளமான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியில் சொந்தமாக்கி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள், க்ரூப் A வில் இடம்பெற்றுள்ளது. சென்னை, பெங்களூர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் க்ரூப் B ல் இடம்பெற்றுள்ளது. மேலும் மொத்தமுள்ள 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் செயல்படுவார் என அந்த அணி அறிவித்திருக்கிறது. சமீபத்தில், நடந்து முடிந்த SAT20 தொடரில் சன் ரைஸர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணிக்கு கேப்டனாக மார்க்ரம் செயல்பட்டிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்க்ரமை கடந்த 2022 ஏலத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 2.6 கோடிக்கு  ஏலத்தில் எடுத்திருந்தது. அந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 381 ரன்களை குவித்திருந்தார். ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் யார்? என ரசிகர்களுக்கு மத்தியில் வெகுநாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் எய்டன் மார்க்ரமை கேப்டனாக அறிவித்திருக்கிறது அந்த அணி.

Also Read | இந்தா கிளம்பிட்டாங்க.. ஊருக்கு திரும்பிய அடுத்த ஆஸ்திரேலிய வீரர்.. முழு விபரம்.!

CRICKET, AIDEN MARKRAM, SUNRISERS HYDERABAD, IPL 2023

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்