‘கேட்ச வுட்டுட்டு ரிவ்யூ ப்ளீஸ்-ஆம்’.. ‘திருந்தவே மாட்டாரு’.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தானில் நிகழ்ந்துவரும் உள்ளூர் கோப்பை போட்டி ஒன்றில் பெடரல் ஏரியாஸ் மற்றும் கைபர் பதுன்கவா அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 பந்துகளில் கைபர் பதுன்கவா அணிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. இந்த 3 ரன்களுக்காக அந்த அணி தவித்துக்கொண்டிருந்தபோதுதான் பேட்ஸ்மேன் தூக்கி அடித்துள்ளார்.

அந்த ஷாட் எல்லைக்கோட்டுக்கு அருகில் சென்று அங்கிருந்த அஹமது ஷேஜாத்தின் கைகளில் பட்டு நழுவியது. லெக் சைடில் பவுண்டரி அருகே வந்த அத்தனை எளிதான கேட்சை மனிதர் நழுவவிட்டதோடு, உடனே அதனை கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு, கையை அசைத்து 3-ஆம் நடுவரை ரிவியூ கேட்டுள்ளார். இந்த சிறுபிள்ளைத் தனமான செயல் வீடியோவாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு கமெண்டுகளை கொட்டும் ரசிகர்கள், முன்னதாக இலங்கைக்கு எதிரான மேட்சிலும் இப்படித்தான் செய்தார், இன்னும் பழைய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்கிறார் என விமர்சித்துவருகின்றனர். தமிழ் நெட்டிசன்கள் சிலர் ‘இது உலக நடிப்புடா சாமி’ என்றும் ட்வீட் போட்டு கலாய்த்துள்ளனர்.

மேலும் மைதானம் முழுதும் கேமரா இருப்பது கூட மறந்து இப்படி மூளை கெட்டு நடந்துகொள்ளும் இவர் அவுட் ஆகியதை 3-வது நடுவர்கள் உறுதி செய்ய வேண்டுமாம் என்றெல்லாம் விமர்சித்துள்ளனர். இறுதியில் இந்த போட்டியில் கைபர் பதுன்கவா அணி வெற்றிபெற்றது. அஹமது ஷேஜாத்தை பொருத்தவரை, அவர் மீதான மோசடி குற்றங்களை கண்டித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டித்ததை அடுத்து அவர் உலகக் கோப்பையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PAKISTAN, VIRALVIDEOS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்