10 ஆண்டுகள் போராட்டம்… 30 வயதில் முதல் வாய்ப்பு..!- யார் இந்த ஹர்ஷல் படேல்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இன்று முதல் முறையாக இந்திய அணியின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார் ஹர்ஷல் படேல்.

Advertising
>
Advertising

30 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆகியிருக்கும் ஹர்ஷல் படேல் இன்றைய நாளுக்காக போராடியது 10 ஆண்டுகள் காலம். கடந்த 2011-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மூலம் தனக்கான அறிமுகத்தை கிரிக்கெட் உலகத்தில் ஏற்படுத்திக் கொண்டார். இன்று முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் கைகளால் டி20 தொப்பியை வாங்கிக் கொண்டார்.

10 ஆண்டுகள் போராட்டத்தில் இன்று கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரத்தை ஹர்ஷல் படேல் பெறும் போது அவரிடம் எந்தவொரு ஆரவாரமும் இல்லை. ஆனந்த கண்ணீர் இல்லை, உற்சாகக் கொண்டாட்டம் இல்லை, ஒரு சின்ன புன்முறுவல் மட்டுமே ஹர்ஷலின் முகத்தில் விரிந்திருந்தது. இதுதான் ‘உழைப்பின் அடையாளம்’ என ரசிகர்கள் சமுக வலைதளங்களில் கமென்ட் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார். ஆர்சிபி அணிக்காக விளையாடிய இந்த ஹரியாணா வீரருக்கு ‘பர்பிள்’ தொப்பியும் கிடைத்தது. முதலில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் மோதிய முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் வீரர்களை தனது அபார பந்துவீச்சால் திணறடித்தார். ஐபிஎல்-ன் இரண்டாவது பாதி UAE-ல் நடந்த போதும் தனது வேகத்தை சற்றும் குறைக்காத அதிகப்பட்சமாக 32 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியில் நுழைவதற்கான வாய்ப்பையும் உறுதி செய்தார்.

கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் போது வெங்கடேஷ் ஐயர் உடன் ஹர்ஷல் படேலும் ‘நெட் பவுலர்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கொஞ்சமும் தளராமல் மீண்டும் தனது காத்திருப்பை கடைபிடித்த ஹர்ஷல் படேலுக்கு தற்போது இரண்டாம் போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்று, ஒரு நாள் போட்டிகளின் சிறந்த பவுலர்களுள் ஒருவராகக் கருதப்படும் அஜித் அகர்கர் கைகளினாலே டி20 தொப்பியை வாங்கியுள்ளார் ஹர்ஷல் படேல். இன்று இந்திய அணியின் சார்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹர்ஷல் படேல் பந்துவீசி தனது புதிய பயணத்தை வெற்றியுடன் தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

CRICKET, HARSHAL PATEL, T20I, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்