'தம்பி, நீங்க பொறக்குறதுக்கு முன்னாடியே...' 'இன்டர்நேஷனல் மேட்ச்ல செஞ்சுரி அடிச்சவன்...' - கோவத்தில் கொந்தளித்த அஃப்ரிடி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் முன்னாள் வீரரான அஃப்ரிடி இலங்கை இளம் வீரர் ஒருவரை கண்டிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் லங்கன் பிரீமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை வீரர்கள் மட்டுமின்றி பிறநாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இதில் அஃப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம்வீரரான நவீன்-உல்-ஹக்கிற்கும் இடையே மோதல் வெடித்தது.  அப்போது போட்டியின் இறுதியில் அனைத்து வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ளும்போது நவீன்-உல்-ஹக்கை காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனான அஃப்ரிடி கண்டித்துள்ளார். அப்போது அஃப்ரிடி, 'தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சர்வதேச போட்டிகளில் நான் சதமடித்தவன்' எனக் கூறியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்