‘தொடர் தோல்வியால் விரக்தியடைந்த வீரர்கள்..’ ஹோட்டலில் ஃபோட்டோ எடுத்தவர்களுடன் செய்த தகராறால் பரபரப்பு..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பையில் தொடர் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் ஹோட்டல் சென்றபோது அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
உலகக் கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து. இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் விரக்தியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து உடனான போட்டிக்கு முதல்நாள் இரவு ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் மான்செஸ்டர் நகரிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த சிலர் அவர்களை ஃபோட்டோ எடுக்க முயன்றுள்ளனர். இதனால் வீரர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீஸார் வீரர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதுபற்றி மான்செஸ்டர் போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மான்செஸ்டர் நகரில் உள்ள அக்பர் ரெஸ்டாரன்டில் இரவு 11.15 மணியளவில் ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கும் பொதுமக்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை கொடுங்கள்'... 'பாகிஸ்தான் ரசிகர்களின் வைரல் போட்டோ'... உண்மை என்ன?
- ‘அடப்பாவமே பாகிஸ்தானுக்கு இப்டியொரு சோதனையா’.. ‘கடைசியில இப்டி இறங்கிட்டாங்களே’!
- ‘இவ்ளோ செஞ்சும் அவர தடுக்க முடியலையே’.. ஒரே போட்டியில் உலகளவில் டிரெண்டான இங்கிலாந்து கேப்டன்!
- ‘அற்புதம்’.. இனி புவனேஷ்வர்குமாருக்கு பதில் விளையாட போறது இவர்தானா? .. சூசகமாக சொன்ன கோலி!
- 'தல தோனியை விட சரியாக கணித்த விராட் கோலி'... 'முதல்முறையாக தவறு செய்த தோனி?'
- 'தொடக்கத்திலேயே பௌலிங்கா?'... 'ஆச்சரியத்தில் மூழ்கிய வீரர்'!
- ‘போட்டிக்கு முதல்நாள் பாகிஸ்தான் வீரர்கள் செய்த காரியம்..’ காட்டமான ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக் விளக்கம்..
- 'சொந்த நாட்டுக்கு திரும்பணுமா?'.. 'அப்ப சொல்ற மாதிரி செய்யுங்க'.. எச்சரித்த கேப்டன்!
- 'மனுஷன்னா விராட் கோலிதான்யா'... 'அவர் அப்படி செய்வாருனு எதிர்பார்க்கலை'!
- ‘அந்த பயம் இருக்கணும்ல..’ ‘இந்தியாவை எதிர்கொள்ளவே பயப்படும் அணிகள்..’ பாராட்டித் தள்ளிய முன்னாள் வீரர்..