'சாலை' விபத்தில் உயிரிழந்த பிரபல 'கிரிக்கெட்' வீரர்... "திரும்பி வருவாருன்னு தான் நெனச்சோம்... இப்டி நடக்கும்னு நினைக்கல..." அதிர்ச்சியில் 'ரசிகர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான நஜீப் தரக்கை (Najeem Tarakai), சாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நஜீம் தரக்கை சாலையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் நஜீமுக்கு அதிகம் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது.
இருந்த போதும், தொடர்ந்து அவர் உயிருக்கு போராடி வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோமாவில் உயிருக்கு போராடிய நஜீம், நினைவு திரும்பாமலே உயிரிழந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து முதல் தர போட்டிகளில் விளையாட ஆரம்பித்த நஜீம், அதன் பின்னர் 12 டி20 சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார்.
டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் மிகச் சிறந்த வீரராக வலம் வந்த நஜீப், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தால் மற்ற ஆப்கானிஸ்தான் அணி வீரர்களும், அணி நிர்வாகமும் வேதனையடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பைப்புக்குள் பக்காவா பேக்கிங்'... 'பாக்க பால் பவுடர் போல இருக்கும்'... 'ஒர்த் மட்டும் 1000 கோடி ரூபாய்'... கொரோனா நேரத்தில் மிரள வைத்த கும்பல்!
- 'மனைவி'யின் மூக்கை அறுத்த 'கணவன்'... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 'மனைவி'... 'இதுக்காக எல்லாமா இப்படி பண்ணுவாங்க'? - உச்சகட்ட 'கொடூரம்'!!!
- 'இந்த நாட்டில் மட்டும்'... '1 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு?'... 'அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்'...
- "மேட்ச் அப்போ அடுத்தடுத்து குண்டு வெடிச்சுது.. சிதறிய உடல்களை தூக்கிட்டு கேட் வரைக்கும் ஓடுனேன்.. அங்க என் கண் முன்னாடியே!!".. உருகிய வீரர்.. உலுக்கும் சம்பவம்!
- 'இவங்க அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லையா!?'.. வேகமாக வந்த லாரி!.. நீதிமன்றம் என்றும் பாராமல்... விநாடிகளில் அரங்கேறிய விபரீதம்!
- 'அங்கு 80% பேருக்கு கொரோனா இருக்கலாம்'... உலகிலேயே 'அதிக' பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றாக வாய்ப்பு... சர்வதேச அமைப்பு 'அச்சம்'...
- ‘அப்பா.. என்ன காப்பாத்துங்கன்னு கண்முன்னாடியே விழுந்தா’.. ‘கொஞ்ச நாள்ல அவளுக்கு 4வது பிறந்தநாள்’.. கண்கலங்க வைத்த கொடூரம்..!
- 'கொரோனா அச்சத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள்'...'தற்கொலை படை தாக்குதல்'...27 பேர் பலி!
- காபூல்: ‘கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் ’... ‘நிகழ்ந்த கோர சம்பவம்’... '14 பேருக்கு நடந்த சோகம்'!
- ‘சீனியர்களை நம்பியதே தோல்விக்குக் காரணம்..’ உலகக் கோப்பைக்குப் பிறகு மனம் திறந்துள்ள கேப்டன்..