350 கோடிக்கு முடிந்த செம்ம டீல்?.. ஒரு போட்டிக்கு 65 லட்சம்.. ஆண்டுக்கு 70 கோடி.. இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் மாற்றம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணிக்கு  கிட் ஸ்பான்சராக ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸை ஒப்பந்தம் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் கூறப்படுகின்றன.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners

கில்லர் ஜீன்ஸ் தயாரிப்பாளரான கேவல் கிரண் க்ளோதிங் லிமிடெட் நிறுவனம் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக உள்ளது. 

Images are subject to © copyright to their respective owners
.
கடந்த மாதம் இடைக்கால ஸ்பான்சராக கில்லர் உள்ளே வந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஸ்பான்சர் மொபைல் பிரீமியர் லீக் ஸ்போர்ட்ஸ் (எம்பிஎல் ஸ்போர்ட்ஸ்) ஒப்பந்தத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இப்போது ஒப்பந்தங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அடிடாஸின் ஐந்தாண்டு ஒப்பந்த காலம் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி மார்ச் 2028 ஆம் ஆண்டு வரை இருக்கும்.

இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அடிடாஸ் நிறுவனம் ₹65 லட்சத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்தும் என கூறப்படுகிறது. வணிகப் பொருட்களுக்கான ராயல்டியும் சேர்த்து, ஆண்டுக்கு ₹70 கோடி வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதன் மூலம் பெறுமானம் அடையும். 5 ஆண்டுகளுக்கு 350 கோடி ரூபாய் வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதன் மூலம் பெறுமானம் அடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners

14 ஆண்டு காலமாக, 2020 வரை அமெரிக்க விளையாட்டு ஆடை நிறுவனமான நைக்கி ஸ்பான்சராக செயல்பட்டது. நைக்கியின் ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் MPL வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்