VIDEO: ‘சிக்ஸ் அடிச்ச அடுத்த பந்தே விக்கெட்’.. விராட் கோலியை 4 முறை அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 ரன்களும், கே.எல்.ராகுல் 47 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் விராட் கோலி 4-வது ஆர்டரில் களமிறங்கினார்.

அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஜாம்பா வீசிய ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். ஆனால் அடுத்த பந்து அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை 4-வது முறையாக ஜாம்பா அவுட் செய்வது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஸ்ரேயஸ் ஐயரும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களை இந்தியா எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 258 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

CRICKET, VIRATKOHLI, BCCI, INDVAUS, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்