'இந்திய வீரர் பத்தி கமெண்டரியில் தப்பான தகவல்!!!'... 'சுட்டிக்காட்டியதும் மன்னிப்பு கேட்ட ஆடம் கில்கிறிஸ்ட்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் வர்ணனை செய்யும்போது செய்த தவறுக்காக ஆடம் கில்கிறிஸ்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் சிட்னியில் நடைபெற்றது. அந்தப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இடம் பிடித்திருந்த நிலையில், நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் நவ்தீப் சைனியைப் பார்த்து, தந்தை இறந்த போதும் சொந்த நாடு திரும்ப விரும்பாமல் அணிக்காக விளையாடுவேன் எனக் கூறிய தைரியமான இதயத்தை கொண்டவர் எனக் கூறினார்.

இதையடுத்து நியூசிலாந்து அணி வீரர் மெக்கிளேனகன், இறந்தது நைவ்தீப் சைனியின் தந்தை அல்ல, முகமது சிராஜின் தந்தை என கில்கிறிஸ்டிடம் கூற, தன் தவறை புரிந்து கொண்ட ஆடம் கில்கிறஸ் நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் முகமது சிராஜ் தந்தை காலமானதால், விரும்பினால் நாடு திரும்பலாம் என அவருக்கு பிசிசிஐ அனுமதி அளித்தும் முகமது சிராஜ் இந்தியா திரும்ப மறுத்துவிட்டு அங்கேயே உள்ளார்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்