ரொனால்டோ - மெஸ்ஸி யாரு பெஸ்ட்.?.. ரசிகரின் கேள்விக்கு ஷாருக் கான் கொடுத்த 'நச்' ரிப்ளை.. வைரல் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

 பிரபல கால்பந்து வீரர்களான மெஸ்ஸி - ரொனால்டோ இருவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் ஷாருக் கான் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் அர்ஜென்டினா பிரான்ஸை எதிர்த்து விளையாடுகிறது. இதனால் மொத்த கால்பந்து உலகமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக் கான் ட்விட்டரில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்திருக்கிறார். அப்போது ஒருவர் "ஏன் மெஸ்ஸியை விட ரொனால்டோ சிறந்தவர்?" என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்திருக்கும் ஷாருக் கான்,"உங்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். எப்போதும் சிறந்ததை தேடாதீர்கள். அது நல்லதை அழித்துவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, மற்றொரு ரசிகர் "இன்று நடைபெறவுள்ள அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நீங்கள் யாரை சப்போர்ட் செய்வீர்கள்?" என கேட்டிருந்தார். இதற்கு ஷாருக் கான் அளித்திருந்த பதிலில்,"இதயம் மெஸ்ஸி என்கிறது. ஆனால் எம்பாப்பே (பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன்) விளையாடுவதை பார்ப்பது ஒரு ட்ரீட் போல இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் ஷாருக் கான் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பிரான்ஸை எதிர்த்து குரோஷியா களமிறங்கியது. இதில் பிரான்ஸ் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

SHARUKH KHAN, FIFA, WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்