கோலி & ஜடேஜாவின் பதான் டான்ஸ்.. நடிகர் ஷாருக் கானின் கலகல கமெண்ட்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா பதான் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலான நிலையில் நடிகர் ஷாருக் கான் இதுகுறித்து கமெண்ட் செய்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | சூரிய குமார் யாதவின் Fan Girl சம்பவம்.. சிறுமியின் 360 டிகிரி பேட்டிங்.. ஜாம்பவான் சச்சின் பகிர்ந்த வீடியோ..!

பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஷாருக் கான். கடந்த சில வருடங்களாக நடிப்பு உலகில் இருந்து விலகி இருந்த ஷாருக் பதான் திரைப்படத்தில் நடித்திருந்தார். பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் 'பதான்' இப்படத்தை இயக்கி இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகியது. வருடக்கணக்கில் காத்திருந்த ஷாருக் ரசிகர்களுக்கு இந்த படம் பட்டாசான ட்ரீட்டாகவே அமைந்துள்ளது. படம் வெளியாகி முதல் 5 நாளில்  543 கோடி ரூபாய்களை இந்த படம் வசூல் செய்து இந்திய அளவில் சாதனையை படைத்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. உலகளவில் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் காதலர் தினமான நேற்று நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அவ்வப்போது #askSRK எனும் ஹேஷ்டாக் மூலமாக தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷாருக் கான் பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ரகர்களிடம் பல்வேறு கருத்துக்களை ஷாருக் கான் பகிர்ந்துகொண்டார்.

Images are subject to © copyright to their respective owners.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது கோலி மற்றும் ஜடேஜா பதான் படத்தில் இடம்பெற்ற 'Jhoome jo Pathaan' பாடலுக்கு ஷாருக் கான் ஆடுவதை போலவே மூவ்மெண்ட் கொடுத்திருந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் ஒருவர்," விராட் கோலி மற்றும் ஜடேஜாவின் பதான் நடனத்தை பற்றி ஏதாவது சொல்லுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த பதிவில் ஷாருக் கான்,"அவர்கள் என்னைவிட நன்றாகவே நடனமாடுகிறார்கள். கோலி மற்றும் ஜடேஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "நல்லா இருக்கீங்களா ரிஷப்?".. குட்டீஸ்கள் அனுப்பிய லெட்டர்.. ரிஷப் பண்டின் நெகிழ்ச்சி பதிவு..!

VIRAT KOHLI, JADEJA, SHAHRUKHKHAN, PATHAAN, JADEJA AND KOHLI PATHAAN DANCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்