‘இதெல்லாம் கரெக்ட்டா அமைஞ்சா, என்னை மறுபடியும் அங்க பார்ப்பீங்க’!.. யாரும் எதிர்பார்க்காத பதில்.. ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ஏபிடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டி வில்லியர்ஸ் ஒரு சூப்பர் தகவல் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியதாக ஒரு வீரர் ஏபி டிவில்லியர்ஸ். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் தொடரிலும் தன் அதிரடியான பேட்டிங்கால் எதிரணியை கதிகலங்க வைப்பவர். இப்படி இருக்கையில் திடீரென அனைத்து விதமான கிரிக்கெட் தொடரிலும் இருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். இது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பாக டி வில்லியர்ஸ் விளையாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் மிரள வைத்தார். அப்போட்டியில் 34 பந்துகளில் 76 ரன்கள் (9 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில், தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து டி வில்லியர்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பவுச்சரிடம் பேசினேன். அவர் என்னிடம் மீண்டும் விளையாட விருப்பமா? என முன்பே கேட்டிருந்தார். தற்போது விளையாட விருப்பமாக இருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளேன்.

இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளேன். ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணியில் விளையாட இடம் இருந்தால், அதேபோல் அணியில் இணைந்து விளையாடும் அளவுக்கு உடல் தகுதி இருக்கும் பட்சத்தில் மீண்டும் களம் காண்பேன்’ என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

டி வில்லியர்ஸ் கூறியதை வைத்து பார்க்கும் போது, அடுத்த நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் மீண்டும் இடம் பிடித்தால், அந்த அணிக்கு பெரிய பலமாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாக டி வில்லியர்ஸ் கூறியது, தென் ஆப்பிரிக்க மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்