விராட் கோலியை முதலில் பார்த்ததும் தப்பா புரிஞ்சுகிட்ட ஏபிடி.. பின்னர் தெரிய வந்த உண்மை.. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில தினங்களில் ஆரம்பமாக உள்ளது. இதனால், சமூக வலைத்தளங்கள் முழுவதும் தொடர்ந்து ஐபிஎல் குறித்த கருத்துக்கள் தான் அதிகம் நிலவி வருவதுடன் ரசிகர்களின் ஆவலும் அதிகமாக இருந்து வருகிறது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என்னா மனுஷன்யா".. பவுண்டரி லைன் அருகே நின்ன குழந்தை.. ரன் போனாலும் பரவாயில்லன்னு பிரபல வீரர் செஞ்ச விஷயம்!!.. வீடியோ!

அதே போல, 10 அணிகளில் எந்த அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்ற விறுவிறுப்பும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இந்த தொடருக்கு முன்பாக மினி ஏலம் நடந்துள்ளதால் ஒவ்வொரு அணியிலும் இணைந்துள்ள வீரர்கள் எப்படி ஆடி ஜொலிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இதில், பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சிறந்த அணியாக வலம் வந்த போதும் கடந்த 15 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இதனால், இந்த முறை தங்கள் மீதான விமர்சனத்தை மாற்றி கோப்பையை முதல் முறையாக வென்று காட்டும் என்றும் அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் ஆர்சிபி அணியில் தான் நட்சத்திர வீரர் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். இதே அணியில் அவருடன் ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் உள்ளிட்ட பலரும் இணைந்து ஆடி உள்ளனர். அதிலும் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரிடையேயான நட்பு மிக அபாரமானது. ஐபிஎல் தொடரில் இருந்து ஏபிடி விலகினாலும் தொடர்ந்து கோலியுடன் நட்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் ஆர்சிபி அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கூட ஏபி டிவில்லியர்ஸ் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கோலியை முதல் முறையாக பார்த்த போது தோன்றிய விஷயங்கள் குறித்து ஏபி டிவில்லியர்ஸ் மனம் திறந்து பேசி உள்ளார். "விராட் கோலியை நான் முதல் முறையாக பார்த்த போது அவர் மிகவும் துணிச்சல் வாய்ந்த நபராக இருந்தார். அதே வேளையில் அவர் திமிர் பிடித்தவர் போலவும் இருக்கிறாரே என நான் நினைத்தேன். அந்த சமயத்தில் அவர் ஹேர் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். இளமை துடிப்புடன் கொஞ்சம் திமிராகவும் கோலி இருந்தார் என நான் நினைத்தேன்.

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் நாட்கள் கடந்த பின்னர் தான் விராட் கோலியை பற்றி நன்கு நான் தெரிந்து கொண்டேன். அப்போது தான் அவர் மீதான பார்வை எனக்கு மாறியது. அது மட்டுமில்லாமல், அவர் மீதான மரியாதையும் கூடியது. அவர் ஒரு நல்ல வீரர் மட்டுமில்லை, நல்ல மனிதரும் கூட" என ஏபிடி தெரிவித்துள்ளார்.

Also Read | IPL 2023 : "இந்த தடவ நான் வரேன்". ஏலத்தில் போகாத போதும் ஸ்டீவ் ஸ்மித் சொன்ன விஷயம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்?

CRICKET, AB DEVILLIERS, VIRAT KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்