"அவரு பேட்டிங் பாக்குறப்போ.. எனக்கே திரும்பி ஆடணும்ன்னு ஆசை வருது.." தமிழக வீரரை மிரண்டு போய் பாராட்டிய 'ஏபிடி'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், சில நட்சத்திர வீரர்கள் இந்த முறை களமிறங்காமல் போனது, நிச்சயம் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "அவரு 'Sledging' பண்றதுல கில்லி.. அப்படியே என்கிட்ட வந்து.." கோலியுடன் நடந்த Face Off.. சூர்யகுமார் ஓபன் டாக்

ஏ பி டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில் உள்ளிட்ட ஐபிஎல் தொடரின் அதிரடி வீரர்கள், இந்த முறை ஐபிஎல் தொடரில் களமிறங்கவில்லை.

இதில், பெங்களூர் அணிக்காக பல ஆண்டுகள் ஆடி வந்த டிவில்லயர்ஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

தமிழக வீரரை பார்த்து மிரண்ட ஏபிடி

அவரது இந்த திடீர் முடிவு, பெங்களூர்,அணியினருக்கும், அதன் ரசிகர்களுக்கு கடும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளித்திருந்தது. இந்நிலையில், தமிழக வீரர் ஒருவரை பார்த்து மிரண்டு போய், டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பெங்களூர் அணி இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில், தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை 5.5 கோடி ரூபாய்க்கு எடுத்திருந்தது. அந்த அணியில் கோலி, பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம், தொடர்ந்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தொடக்க வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்தாலும், தனியாளாக பல போட்டிகளில் நின்று ரன் சேர்த்துள்ளார்.

அதே போல, கடைசி கட்டத்தில் ரன் அடித்து, பெங்களூர் அணியின் பினிஷர் வேலையையும் சிறப்பாக செய்து வருகிறார் தினேஷ் கார்த்திக். பலரும், டிவில்லியர்ஸுடன் ஒப்பிட்டு தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் ஆட்டம் பற்றி, டிவில்லியர்ஸ் மிரண்டு போய் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

எனக்கே ஆசையா இருக்கு..

"இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் 2 முதல் 3 போட்டிகளை பெங்களுர் அணி வெல்ல காரணமாக இருந்தது தினேஷ் கார்த்திக் தான். இப்படி ஒரு ஃபார்ம் எங்கிருந்து அவருக்கு வந்தது என எனக்கு.தெரியவில்லை. ஏனென்றால் பெரிய அளவில் அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியதில்லை. நல்ல ஃபார்மில் இருக்கும் அவர், 360 டிகிரியில் ஆடி வருகிறார். இக்கட்டான சூழ்நிலைகளிலும் அவரது அனுபவம், பெங்களூர் அணிக்கு பெரிய அளவில் கைகொடுத்து வருகிறது.

அவரது ஆட்டத்தை பார்க்கும் போது, மீண்டும் நான் கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உருவாகிறது. இதே போன்று தினேஷ் கார்த்திக் தொடர்ந்து ஆடினால், நிச்சயம் ஆர்சிபி அணி நீண்ட தூரம் செல்லும். நான் கொஞ்சம் கூட இதனை எதிர்பார்க்கவில்லை. நான் கடைசியாக தினேஷ் கார்த்திக்கை பார்க்கும் போது, அவர் வர்ணனனை செய்து கொண்டிருந்தார். தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கடைசி கட்டத்தில் அவர் இருக்கிறார் என நினைத்தேன். ஆனால், அனைவருக்கும் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் அவர் அதிர்ச்சி அளித்துள்ளார்" என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Also Read | வேட்டி.. வேட்டி.. வேட்டி கட்டு.. பிரபல CSK வீரருக்கு.. 'தமிழ்' முறைப்படி நடந்த 'Pre Wedding' கொண்டாட்டம்.. குத்தாட்டம் போட்ட சென்னை வீரர்கள்.!

CRICKET, AB DE VILLIERS, DINESH KARTHIK, ஐபிஎல், ஏபிடி, தினேஷ் கார்த்திக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்