"கடைசில ஜாஹீர்கான் சொன்னது உண்மைதான் போல".. இந்தியா - இங்கிலாந்து மேட்ச் பார்த்துட்டு டிவில்லியர்ஸ் போட்ட பரபர ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | INDIA VS ENGLAND: கண்கலங்கியபடி வெளியேறிய விராட் கோலி.. ரசிகர்களின் நெஞ்சை நொறுக்கிய வீடியோ..!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர் 12 சுற்றின் முடிவுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.

அடிலெய்டில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் நிதானமாக ஆடிய விராட் கோலி அரைசதம் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு பக்கம் நிதானமாக ஆட்டத்தை துவங்கிய ஹர்திக் பாண்டியா இறுதியில் அபாரமாக ஆடி 63 ரன்களை குவித்தார்.

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிபெற செய்தனர். 16 ஓவர்களில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தனர்.

முன்னதாக, முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் நடப்பு  டி 20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும் எனவும் இந்தியா கோப்பையை வெல்லும் எனவும் கணித்திருந்தார். ஆனால், நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், இந்தியாவிடம் அபார வெற்றி பெற்று இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கின்றன.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் டிவில்லியர்ஸ்,"என்னுடைய இரண்டு நாக்அவுட் கணிப்புகளும் தவறாகிவிட்டன. ஜாஹீர்கானின் வார்த்தைகளில் சொன்னால்,"இது ஒரு வேடிக்கையான பழைய விளையாட்டு". குறிப்பாக T20 போட்டிகளில். ஆனால் போட்டி முடிவடையும் வரையில் எதுவும் முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Also Read | இறுதிப்போட்டியில் நுழைந்த இங்கிலாந்து.. இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல சேனல்.. குஷியில் ரசிகர்கள்..! T20WorldCup22

CRICKET, AB DE VILLIERS, AB DE VILLIERS TWEET, T20 WC FINAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்