இனி 'அம்பயர்கள்' நிம்மதியா தூங்குவாங்க...! அவரு 'செஞ்ச காரியம்' கோப்பைய ஜெயிக்குறத விட பெருசு...! - கோலியை நினைத்து உருகிய வீரர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடங்கிய காலம் முதல் இன்று வரை அணி மாறாத விசுவாசமிக்க ஒரே வீரர் விராட் கோலி தான் என சுனில் கவாஸ்கர் கோலியை குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
2021-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனுடன் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்களுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது செய்தியாளர் சந்திப்பில் மிக உருக்கமாக விராட் பேசியிருந்தார்.
அப்போது, தான் ஆர்.சி.பி கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஐபிஎல் தொடரில் எப்போதும் ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார். மேலும், தன்னுடைய கேப்டன்சியில் இளம் வீரர்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் தான் மிக தீவிரமாக இருந்ததாகவும், இதை இந்திய அணியிலும் செயல்படுத்தியதாக கோலி அன்று ஆட்டம் முடிந்தவுடன் உருக்கமாகத் தெரிவித்தார்.
கோலியின் இந்த பேச்சு ஆர்.சி.பி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கோலியின் பயணம் சுவாரஸ்யமான சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
'விராட் கோலி ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளார். விராட் கேப்டன் பதிவியிலிருந்து விலகும் போது அவர் அணி வெற்றியை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருப்பார். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை.
இதேபோல் டான் பிராட்மேன் தன் கடைசி போட்டியில் 4 ரன்கள் எடுத்திருந்தால் டெஸ்ட் அரங்கில் யாரும் நெருங்க முடியாத 100 ரன்கள் என்ற சராசரியில் முடிந்திருப்பார், ஆனால் கடைசி போட்டியில் டக் அவுட் ஆனார்.
அதேபோல் சச்சின் டெண்டுல்கர் தன் 200-வது டெஸ்ட் போட்டியில் விண்டீஸுக்கு எதிராக சதம் எடுக்க விரும்பினார் ஆனால், 74 ரன்களில் ஆட்டமிழந்தார். கிரிக்கெட் கணிக்க முடியாத களம். இருப்பினும் விராட்டை நாம் குறைவாக எடை போடக் கூடாது.
கடந்த 2016 -ம் ஆண்டு நடந்த தொடரில் ஆயிரம் ரன்களுக்கு 27 ரன்கள் குறைவாக 973 ரன்களை விராட் குவித்தார். இதுநாள் வரை இதை யாரும் நெருங்க முடியவில்லையே?' எனக் கூறினர்.
மேலும், விராட் கோலி குறித்து ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறும்போது, 'விராட் தன்னுடைய கேப்டன் பதவி விலகலை இன்னும் சில வருடம் தள்ளி போட்டிருக்கலாம். அவர் ஆர்.சி.பி அணியை மிக சிறப்பாக வழி நடத்தினார். கோலி சிறந்த வீரர் மட்டுமல்லாது மிக சிறந்த மனிதர்.
இளம் வீரர்கள் மத்தியில் தன்னம்பிக்கை விதையை விதைத்தார். அவர் செய்த இந்த செயல் கோப்பையை வெல்வதை விட பெரியது. விராட் கேப்டன் பதவியிலிருந்து விலகியதால் சில அம்பயர்கள் இனி நிம்மதியாகத் தூங்கலாம். இனிமையான நினைவுகளைத் தந்ததற்கு நன்றி' எனக் கூறியுள்ளார் ஏ.பி.டிவிலியர்ஸ்.
ஐபிஎல் அரங்கில் அணி மாறாத ஒரே வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. 140 ஐபிஎல் போட்டிகளில் 4,881 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளதும் விராட் கோலி தான். அடுத்து 4456 ரன்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இது நாம எதிர்பார்த்த முடிவு இல்ல.. ஆனா...!’ தோல்விக்கு பின் விராட் கோலி பதிவிட்ட ட்வீட்.. ரசிகர்கள் உருக்கம்..!
- எப்படி 'கெத்தா' இருந்த மனுஷன்...! 'நான் எங்கையும் போகமாட்டேன்...' 'மனசுல' இருந்தத கொட்டிய கோலி...! - வேதனையில் ரசிகர்கள்...!
- ‘நாங்களும் மனுசங்கதான்’.. இந்த மாதிரி யாராவது பண்ணா உடனே ‘Block’ பண்ணிடுவேன்.. செம ‘கடுப்பான’ மேக்ஸ்வெல்.. என்ன நடந்தது..?
- மேட்ச் தோத்ததுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க.. RCB ஆல்ரவுண்டரின் மனைவியை சீண்டிய ரசிகர்கள்.. பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!
- விராட் கோலியை விட இவர் தான் இப்போ டிரெண்டிங்கே.. யார் இந்த டேனியல் கிறிஸ்டியன்..? வச்சு செய்யும் ரசிகர்கள்..!
- VIDEO: என்னங்க நெனச்சிட்டு இருக்கீங்க...? 'நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்...' 'ஓரளவு தான் பொறுக்க முடியும்...' 'மேட்ச் நடுவுல கோவத்தோட உச்சிக்கு போன கோலி...' - என்ன நடந்துச்சு...?
- VIDEO: ‘120% உழைப்பை RCB-க்காக கொடுத்திருக்கிறேன்.. ஆனா...!’ தோல்விக்கு பின் கோலி சொன்ன வார்த்தை.. உடைந்துபோன ரசிகர்கள்..!
- ‘ஒன்னில்ல ரெண்டில்ல மொத்தம் 4 விக்கெட்’.. ஒத்த ஆளாய் RCB-ஐ மிரள வைத்த KKR வீரர்.. நொந்துபோன கோலி..!
- அந்த ‘ஒத்த’ வார்த்தைக்காகவா டெலிட் பண்ணீங்க..! கோலி போட்ட ‘முதல்’ ட்வீட்டை நோட் பண்ணீங்களா.. இந்த மனுசன் உண்மையாவே ‘வேறலெவல்’ தாங்க..!
- VIDEO: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. ‘ஒத்த பந்தில் மாறிய ஆட்டம்’.. வெறித்தனமான சம்பவம் பண்ணிய RCB விக்கெட் கீப்பர்..!