"நேத்து அவருகிட்ட பேசுறப்பவே".. சதமடிப்பதற்கு ஒரு நாள் முன் ABD கிட்ட பேசுன கோலி.. வைரலாகும் ட்வீட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆசிய கோப்பை தொடரில், சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் தங்களின் கடைசி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டிருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இந்திய அணி இழந்து விட்டது.
அப்படி இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த சதம் குறித்த செய்தி தான், தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, சுமார் 1000 நாட்கள் கழித்து, 84 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் சதம் ஒன்றை அடித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கு முன்பாகவே கோலி பேட்டிங் மீது கடும் விமர்சனம் எழுந்து வந்தது. ஆனால், ஆசிய கோப்பையில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி, தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் 'King' என்பதை நிரூபித்துள்ளார். மேலும், இவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி குறித்து கூறிய பதிவு, அதிகம் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணிக்காக விராட் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இணைந்து ஆட ஆரம்பித்தது முதல் சிறந்த நண்பர்களாக விளங்கி வருகின்றனர்.
அப்படி இருக்கையில், கோலி தனது 71 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளதால் இது பற்றியும் டிவில்லியர்ஸ் செய்த ட்வீட் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி, "மீண்டும் நடனமாடுகிறேன். என்ன ஒரு அசத்தலான ஆட்டம்" என ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, மற்றொரு ட்வீட்டில், "நேற்று அவரிடம் பேசிய போதே ஏதோ நடக்க போகிறது என்ற ஒரு உணர்வு இருந்தது. நன்றாக ஆடினாய் நண்பா" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிக்ஸர், பவுண்டரி'ன்னு விளாசிய சூர்யகுமார்.. அவர பாத்து 'கோலி' செஞ்ச விஷயம்.. "அட, அவரே அப்டி பண்ணிட்டாரா?!".. செம வைரல் வீடியோ!!
- India Vs Pakistan: ஹர்திக் பாண்டியாவின் அசால்ட் சம்பவம்.. மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி போட்ட பதிவு.. பக்காவா பொருந்துதே..!
- இந்தமாறி நேரத்துல வீரனுங்கல்லாம் என்ன செய்வாங்க தெரியுமா..? சிக்ஸ்க்கு முன்னாடி பாண்டியா கொடுத்த ரியாக்ஷன்..தெறி வீடியோ..!
- பாகிஸ்தான் வீரர் சொன்ன வார்த்தை.. அடுத்த செகண்டே புன்னகைத்த கோலி.. "ஊரே அதுக்கு தான் பாஸ் வெயிட்டிங்"
- "என்னோட கிரிக்கெட் வாழ்க்கை'லயே".. தோனி குறித்து கோலி போட்ட 'Emotional' பதிவு.. மனம் உருகிய கிரிக்கெட் ரசிகர்கள்
- ஆசிய கோப்பை தொடர் : "இந்திய அணிக்கு இப்டி ஒரு சிக்கல் வந்துடுச்சே.." சமாளிக்குமா 'ரோஹித் அண்ட் கோ?'
- "ஒரு விஷயத்துல தெளிவா முடிவு எடுத்துட்டோம்.." கட்டம் கட்டி தயாராகும் இந்திய அணி.. ரோஹித் ஷர்மா சொன்ன அதிரடி 'பிளான்'!!
- "கோலி Captaincy'ல நான் மட்டும் ஆடி இருக்கணும், இப்போ கதையே வேற.." இந்திய அணி குறித்து ஸ்ரீசாந்த் சொன்ன கருத்து..
- ODI ஓய்வை அறிவித்த ஸ்டோக்ஸ்.. கோலியின் மனம் உருக வைத்த கமெண்ட்..
- "கோலி இவ்ளோ ரன் தான் அடிப்பாரு.." கரெக்ட்டா Guess பண்ணி பிரம்மிக்க வெச்ச ரசிகர்.. "Ball எவ்ளோ'ன்னு கூட கச்சிதமா சொல்லி இருக்காரே.."