T20 World Cup final: சிஎஸ்கே போட்ட அதே ப்ளானைதான் நாங்களும் யூஸ் பண்ணப்போறோம்.. ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன்டாக்..! அப்படி என்ன ப்ளான் அது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணியின் யுக்தியை பயன்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று (14.11.2021) துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. இரு அணிகளும் ஒருமுறை கூட டி20 உலகக்கோப்பையை கைற்றியதில்லை என்பதால், எந்த அணி வெற்றி பெறப்போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ளது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், ‘இந்த டி20 உலகக்கோப்பையை தொடரில் சாம்பியன் யார் என்பதை டாஸ் முடிவு செய்யாது. இப்போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால், முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். அதனால் டாஸ் தோற்றால் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்தது. அதனால் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி பின்பற்றிய இதே யுக்தியைதான் நாங்களும் பின்பற்ற உள்ளோம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்துவிட்டால், சேசிங்கின் போது அழுத்தத்தினால் எதிரணி ஏதாவது தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையில் நியூஸிலாந்து அணியும் நிச்சயம் மிகவும் சவாலானதாக இருக்கும்’ என ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில்தான் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் மற்றும் இதுவரை நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிகளில், துபாய் மைதானத்தில் டாஸ் தோல்வியடைந்து முதலில் பேட்டிங் செய்த அணிகளில் சிஎஸ்கேவை தவிர எந்த அணியும் வெற்றிபெறவில்லை. அதனால்தான் சிஎஸ்கே அணியின் யுக்தியை பின்பற்ற உள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

CSK, MSDHONI, T20WORLDCUPFINAL, NZVAUS, AARONFINCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்