"இது தான் சரியான நேரம்"... திடீர்ன்னு ஆஸ்திரேலியா கேப்டன் எடுத்த முடிவு.. கலங்கிய ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடர்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடர்களில் ஆட உள்ளது.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | உருக்குலைந்த 2200 வருச பழமையான கோட்டை.. உலகையே கதிகலங்க வெச்ச நிலநடுக்கம்!!

முதலாவதாக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரும், பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதனிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி 20 கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை தற்போது அறிவித்துள்ளார்.

36 வயதாகும் ஆரோன் பின்ச், 146 ஒரு நாள் போட்டிகள், 103 டி 20 போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள அவர், தற்போது ஓய்வு முடிவை எடுத்துள்ளார். ஒரு நாள் மற்றும் டி 20 என இரண்டிலும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக செயல்பட்டு வந்த பின்ச் தலைமையில் ஆஸ்திரேலியா அணி டி 20 உலக கோப்பையை வென்றுள்ளது. அதே போல, 2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பைத் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியிலிலும் அங்கம் வகித்துள்ளார் பின்ச்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது வரையில் ஆஸ்திரேலியா அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச டி 20 போட்டியில், ஆரோன் பின்ச் அடித்த 172 ரன்கள் தான் தனிநபர் அதிபபட்ச ஸ்கோராகவும் உள்ளது. ஐபிஎல் தொடரிலும் ஆடியுள்ள ஆரோன் பின்ச்சிற்கு ஏராளமான ரசிகர்கள் இந்தியாவிலும் உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ள ஆரோன் பின்ச், "2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பை வரை நான் ஆடமாட்டேன் என்பதை உணர்ந்து கொண்டு ஓய்வு பெற இது தான் சரியான நேரம் என நினைக்கிறேன். இதனால், அந்த உலக கோப்பை தொடருக்காக அணியை திட்டம் போட்டு தயார் செய்யவும் முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து, தனது குடும்பத்தினர் மற்றும் அணி நிர்வாகத்தினர் அனைவர்க்கும் நன்றியை குறிப்பிட்டுள்ள ஆரோன் பின்ச், 12 ஆண்டு காலம் பல தலைசிறந்த வீரர்களுடன் விளையாடியது நம்பமுடியாத மரியாதையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆரோன் பின்ச் முடிவு ரசிகர்களை மனம் உருக வைத்திருக்கும் அதே வேளையில், தொடர்ந்து வாழ்வின் அடுத்தகட்ட படிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | பிரதமர் மோடி & வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அனுப்பிய Gift..! வைரல் Pics..!

CRICKET, AARON FINCH, AARON FINCH ANNOUNCE RETIREMENT, INTERNATIONAL CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்