ஸ்ரேயாஸ் எல்லாம் வேண்டாம்.. RCB-க்கு அடுத்த கேப்டனா அவரை போடுங்க.. யாருமே யோசிக்காத வீரர் பெயரை சொன்ன ஆகாஷ் சோப்ரா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக யாரை நியமிக்கலாம் என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம்
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் இணைய உள்ளன. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 1214 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்சிபிக்கு அடுத்த கேப்டன்
இந்த ஏலத்துக்கு முன்பாக விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. கடந்த ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதனால் பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதனிடையே டெல்லி அணிக்காக கடந்த 2019, 2020 ஆகிய இரு ஐபிஎல் சீசன்களில் மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பெங்களூரு அணி கேப்டனாக நியமிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அதனால் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை பெங்களூரு அணி எடுக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின.
ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘பெங்களூரு அணி, மேக்ஸ்வெலை ஏன் கேப்டனாக கருதக்கூடாது? கடந்த ஆண்டு அவர் ஆர்சிபி அணிக்காக மிக சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்குமா? அது மிகவும் கடினமான ஒன்று. அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயரும் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அவரை கேப்டனாக நியமிக்க பெங்களூரு அணி நினைக்கலாம், ஆனால் அவர் எனது முதல் தேர்வாக இருக்க மாட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் நல்ல சாய்ஸ்
ஏனென்றால், பெங்களூரு சின்னசாமி மைதானம் அப்படிப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய கூடியவராக இருக்கும் அவர், விராட் கோலி இருக்கும் வரை அந்த ஆர்டரில் விளையாடுவது கடினம்தான். ஒன்று மேக்ஸ்வெலை கேப்டனாக்க வேண்டும் அல்லது நான் இங்கு ஒரு பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன், அவர்தான் ஜேசன் ஹோல்டர்.
பெங்களூரு அணியில் விளையாட தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டவராக ஜேசன் ஹோல்டர் உள்ளார். ஒரு அணியை எப்படி வழி நடத்த வேண்டும் என நன்கு அறிந்துள்ளவர்’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஜேசன் ஹோல்டர், கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அப்படி போடு’.. ரசிகர்கள் செலக்ஷன்.. லக்னோ அணிக்கு பெயர் என்ன தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- ஐபிஎல் ஏலத்துல கலந்துக்கல.. திடீர் ‘ஷாக்’ கொடுத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம்..?
- RCB அணிக்கு அடுத்த கேப்டன் இவரா..? லிஸ்ட்லயே இல்லாத பெயரா இருக்கே..! கசிந்த தகவல்..!
- பிசிசிஐ கொடுத்த ஆஃபர்.. நோ சொல்லி ஒதுங்கிய கோலி??.. என்னங்க சொல்றீங்க?.. மீண்டும் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்
- 'ஐபிஎல்' என் சந்தோஷத்த இல்லாம பண்ணிடுச்சு.. டிவில்லியர்ஸ் ஓய்வுக்கு பின்னால இப்படி ஒரு விஷயம் இருக்கா?.. கலங்கிய ரசிகர்கள்
- இது என்னய்யா புது ட்விஸ்ட்டா இருக்கு..! இந்த வருசம் ஐபிஎல் அந்த நாட்டுலயா நடக்கபோகுது..? பிசிசிஐ-ன் ப்ளான்-B இதுதானா..?
- இனி ‘VIVO’ ஐபிஎல் கிடையாது.. டைட்டில் ஸ்பான்சரை தட்டித் தூக்கிய ‘மிகப்பெரிய’ நிறுவனம்..!
- இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ‘ஏலம்’ போன வீரர் திடீர் ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- BCCI போட்ட பிளான் B - இந்த IPL சீரிஸ் முழுவதும் அங்க மட்டும்தான் நடக்கும் போலயே?
- சரியா ‘வாய்ப்பு’ கிடைக்கல.. திடீரென ஓய்வை அறிவித்து ‘அமெரிக்கா’-க்கு விளையாட பறந்த SRH வீரர்..!